கபில சந்திரசேன மரணத்தில் புதிய திருப்பம்! அரவிந்த டி சில்வா வீட்டில் இரவு தங்கிய மர்ம நபர் குறித்து அதிர்ச்சி தகவல்
Kapila Chandrasena மரண விவகாரம் தற்போது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
SriLankan Airlines நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன மரணம் தொடர்பான வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் Aravinda de Silva வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதுடன், கபில சந்திரசேனவின் வீட்டிலிருந்த சிசிடிவி அமைப்பும் சம்பவ நேரத்தில் செயலிழந்திருந்ததாக கூறப்படுவது சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
மேலும், கபில சந்திரசேனவை பிணையில் எடுப்பதற்காக அரவிந்த டி சில்வா ஏற்பாடு செய்ததாக கூறப்படும் சிலர் சம்பவத்துக்கு முந்தைய இரவு வீட்டில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்களிடம் இதுவரை முழுமையான வாக்குமூலம் பெறப்படவில்லை என்பதும் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுஷ்கா டி சில்வா வழங்கிய தகவலின்படி, சம்பவ இரவில் நான்கு அல்லது ஐந்து பேர் வீட்டிற்கு வந்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதில் ஒருவரே அரவிந்த டி சில்வாவும் கபில சந்திரசேனவும் உடன் இரவு உணவு மேசையில் இருந்ததாக வீட்டு பணியாளர் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் பின்னர் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பகலில் அணிந்திருந்த அதே உடையிலேயே கபில சந்திரசேன இரவிலும் இருந்ததாக கூறப்படும் தகவல் விசாரணையில் புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்த மரணம் தொடர்பான மர்மம் நாளுக்கு நாள் ஆழமடைந்து வரும் நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்வி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!