நுவரெலியா, மாகஸ்தோட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும், அவரது காதலன் எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்று மாகஸ்தோட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) பெண்ணொருவர் கடந்த 10.11.2026 அன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் குற்றப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர், வியாழக்கிழமை (12.11.2026) இரவு நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தேரிப்பஹா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் கடந்த 10ஆம் திகதி தேரிப்பஹா பொலிஸ் பிரிவில் பொலிஸ் காவலிலிருந்து தப்பிச் சென்ற தேடப்பட்டு வந்த நபர் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!