news@ilakkiyainfo.com

பிரிவுகள்

“காதலியிடம் ஆணுறை” பின் தொடர்ந்த காதலன் மயங்கி விழுந்த கொடூரம்

14 Jul, 2026
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு மரணம், ஆரம்பத்தில் தற்செயலான ஒன்றாகக் கருதப்பட்டாலும், விசாரணையின் முடிவில் வெளிச்சத்திற்கு வந்த கள்ளக்காதல் பின்னணி ஒட்டுமொத்தப் பகுதியையுமே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மாயமான ரவி... கண்டெடுக்கப்பட்ட சடலம்! அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி சாஹு (24) என்ற இளைஞர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இறுதியில் காட்டுப் பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரவியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி (43) என்பவரது எண் அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டிருந்தது தெரியவந்தது.

சுனிதா தேவியின் இரட்டை முகம்! கணவனை இழந்த சுனிதா தேவி, தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஆரம்பத்தில் ரவியுடனான நெருக்கத்தை ஒப்புக்கொண்ட அவர், ரவியின் மரணத்திற்குத் தனக்குத் தொடர்பில்லை என நாடகமாடினார். 

ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ரவி உணவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருப்பது உறுதியானது. தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சுனிதா, திடுக்கிடும் உண்மைகளை வாக்குமூலமாக அளித்தார்.

அதிர்ச்சியில் உறைந்த தந்தை! சுனிதா தேவி, ரவியுடன் மட்டுமல்லாமல், அவரது தந்தை ராஜேஷ் சாஹுவுடனும் (48) நீண்டகாலமாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஒரே வீட்டில் தந்தை, மகன் என இருவருடனும் இரகசிய வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் சுனிதா.

சந்தேகமே எமனானது! ஒருமுறை, சுனிதாவின் ஹேண்ட் பேக்கிற்குள் இருந்த ஆணுறையைக் கண்ட ரவி, அது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 சுனிதா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்க, ரவி தனது தந்தையுடன் அவருக்கு இருக்கும் கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டார். ரவி இந்த உண்மையை வெளியே சொல்லிவிடுவார் என்று அஞ்சிய சுனிதா, அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார்.

மெல்லக் கொல்லும் விஷம்!
அவன் தினசரி சாப்பிடும் தின்பண்டங்கள் மற்றும் பழங்களில் சிறிது சிறிதாக விஷம் கலந்து கொடுத்திருக்கிறாள். ஒருகட்டத்தில் உடல் நலம் குன்றி ரவி மயங்கி விழுந்தபோது, அவனைக் காப்பாற்ற முன்வராத சுனிதா, வீட்டின் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளாள்.

தன் மகனின் மரணத்திற்குக் காதலியே காரணம் என்பதைத் தெரிந்துகொண்ட தந்தை ராஜேஷ் சாஹு, அதிர்ச்சியில் உறைந்து போனார். 

தற்போது சுனிதா தேவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதாரண அண்டை வீட்டு உறவாகத் தொடங்கி, படுகொலையில் முடிந்த இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதலில் இது தற்செயல் மரணம் என்றுதான் நினைத்தோம். ஆனால், விசாரணையில் வெளியான உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!