news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காப்பி ரைட்ஸ்ல பணம் தான் வரும்.. புகழ் வராது.. அந்த கரு கரு கருப்பாயி வந்திருக்குமா.. தெய்வம் தேவா!

18 Oct, 2026
சென்னை: கோடிக்கணக்கில் சம்பாதித்தும் ஒரு சிலர் இன்னமும் பணத்துக்கு பின்னாடி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு சிலர் மட்டுமே தேவா போல தெய்வமாக உள்ளனர் என ரசிகர்கள் தேவாவின் த்ரோபேக் பேட்டியை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். 

மஞ்சுமெல் பாய்ஸ், ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட படங்களுக்கே காப்பி ரைட்ஸ் பிரச்னை பெரிதாக வெடித்த நிலையில், காப்பி ரைட்ஸ் எல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா? என தேவாவிடம் கலாட்டா யூடியூப் சேனலில் பேட்டி எடுக்கப்பட்டது.

அதற்கு அவர் சொன்ன பதில் தான் ரசிகர்கள் மத்தியில் அவர் எப்போதும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதை புரிய வைத்தது. பணம் வரும்.. புகழ் வராது: ஒரு காலத்தில் ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என இசையமைத்த தேவா, விஜய்யுடன் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். 

அஜித், சூர்யா, சிம்பு என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா பாடல்களை கை வைத்தால் காப்பி ரைட்ஸ் பிரச்னை வரும் என்பதால் புதிய இசையமைப்பாளர்கள் புதிய படங்களில் தேவா பாடல்களை தாராளமாக பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து தேவாவிடமே கேள்வி எழுப்பிய போது, காப்பி ரைட்ஸ் கேட்டால் பணம் வரும்.. ஆனால், புகழ் வராதே என பதிலளித்தார். அந்த மனசு தான் தேவா சார்

கரு கரு கருப்பாயி வந்திருக்குமா?: லியோ படத்தில் தேவா இசையில் உருவான கரு கரு கருப்பாயி பாடலை விஜய்யை நடனமாட வைத்து படமாக்கியிருப்பார் லோகேஷ் கனகராஜ். காப்பி ரைட்ஸ் இல்லாத நிலையில் தான் கரு கரு கருப்பாயி வந்தது. 

இப்போ 2கே கிட்ஸ் வரை நான் மீண்டும் தெரிகிறேன்ல, குழந்தைகள் எல்லாம் ரசிக்கிறாங்களா அதுதான் எனக்கு பெருசு, பணம் பெருசு கிடையாது என செம வெளிப்படையாக தேவா அளித்த பேட்டியை ஷேர் செய்து இந்த மனசு தான் சார் கடவுள் என பதிவிட்டு வருகின்றனர். ஒரே வருடத்தில் 36 படங்களுக்கு இசையமைத்த தேவா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒட்டுமொத்தமாக 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!