வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்ல முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான எஸ்.கே. பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை அதிகாரி தனது காலணிகளுக்குள் மறைத்து வைத்து 98 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றை சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
சிறைச்சாலையின் பிரதான வாயிலில் வைத்து சிறைச்சாலை காவலர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, குறித்த போதைப்பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான சிறைச்சாலை காவலர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!