சென்னையில் நடைபெற்ற காவியா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலாநிதி மாறன் மற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே ஃபிரேமில் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணமக்களை வாழ்த்துவதற்காகப் பூங்கொத்துடன் வருகை தந்த முதலமைச்சர் விஜயை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலாநிதி மாறன் மற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் புன்னகையுடன் வரவேற்றனர்.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா இன்று (நவம்பர் 21) விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காகப் பூங்கொத்துடன் வருகை தந்த முதலமைச்சர் விஜயை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலாநிதி மாறன் மற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் புன்னகையுடன் வரவேற்றனர். அரசியல் மற்றும் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் ஒரே மேடையில் இணைந்த இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளருமான காவியா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமணம் 11.11.2026-ம் தேதி, கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஆஸ்டிர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதையடுத்து, சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, கலாநிதி மாறன் தனது மகளின் திருமணத்திற்காக, பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய், அண்டை மாநில முதலமைச்சர்கள் ரேவந்த் ரெட்டி, வி.டி.சதீசன், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்திருந்தார்.
கிரீஸில் நடைபெற்ற காவியா மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண விழாவில், அனிருத்தின் குடும்ப உறவினரான ரஜினிகாந்த், காவியாவின் குடும்ப உறவினரான தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நெருக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் காவியா மாறன் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா இன்று (நவம்பர் 21) விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த வகையில், முதலமைச்சர் விஜய் இவ்விழாவில் நேரில் பங்கேற்றுப் புதுமணத் தம்பதியினருக்குத் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது கலாநிதி மாறன் தம்பதி மற்றும் அனிருத்தின் பெற்றோர் உடனிருந்தனர்.
இவ்விழாவில் மணமக்களை வாழ்த்துவதற்காகப் பூங்கொத்துடன் வருகை தந்த முதலமைச்சர் விஜயை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலாநிதி மாறன் மற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் புன்னகையுடன் வரவேற்றனர்.

அரசியலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் அவரது ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தாலும் விழாவில் இருவரும் புன்னகையுடன் சந்தித்துக்கொண்டனர். அரசியல் மற்றும் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் ஒரே மேடையில் இணைந்த இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே போல, இவ்விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் (கருப்பு கோட் சூட்), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (கருப்பு-வெள்ளை கோட் சூட்) மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரும் அருகருகே அமர்ந்து உற்சாகமாகப் பேசிக்கொண்ட தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!