கிருஷ்ணகிரியில் கொடூரம்: இராணுவ வீரர் மற்றும் தந்தை வெட்டிக்கொலை!
கிருஷ்ணகிரி அருகே பாலகுறி பகுதியில், இராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, உடல்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இராணுவப் பணியில் இருந்த மகேஷ்குமார் என்பவரின் மனைவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது குறித்துத் தட்டிக் கேட்ட மகேஷ்குமாருக்கும் அவரது மனைவியின் கள்ளக்காதலனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த அந்த நபர் மகேஷ்குமாரையும், அவரைத் தடுக்க வந்த அவரது தந்தையையும் அரிவாளால் வெட்டிச் சாய்த்துள்ளார்.
பின்னர், கொலையை மறைப்பதற்காக இருவரின் உடல்களையும் பெட்ஷீட்டில் கட்டி எடுத்துச் சென்ற கொலையாளி, கொடுகூர் மற்றும் வெப்பாலம்பட்டி ஆகிய பகுதிகளில் வீசி பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். சாலையோரத்தில் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்த பொலிஸார், தீவிர விசாரணையின் மூலம் உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகன் என்பதை உறுதி செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள கொலையாளியைப் பிடிக்கப் பொலிஸார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!