அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு வடமேற்கே 2,600 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவில் உலகின் மிக அற்புதமான இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான சிவப்பு நண்டுகளின் வருடாந்த இடப்பெயர்வு ஆரம்பமாகியுள்ளது.
சுமார் 100 மில்லியன் சிவப்பு நண்டுகள் இனப்பெருக்கத்திற்காகவும் முட்டையிடுவதற்காகவும் தீவின் உட்பகுதியிலுள்ள காடுகளிலிருந்து சமுத்திரத்தை நோக்கிப் படையெடுத்துள்ளன. இதனால் தீவின் வீதிகள் எங்கும் சிவப்பு நண்டுகள் நிறைந்து காணப்படுவதுடன், உள்ளூர்வாசிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அதிசய நிகழ்வை உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பார்வையிடும் வகையில், 'பார்க்ஸ் அவுஸ்திரேலியா' நிறுவனம் இவ்வாண்டு முதல் முறையாக இதனை நேரலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
நண்டுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் போக்குவரத்துப் பாதிப்புகளைக் குறைக்கவும் விசேட 'நண்டுப் பாலங்கள்' அமைக்கப்பட்டுள்ளதாகவும், சில வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தேசிய பூங்கா முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
"இது காட்டுக்குள் ஒரு சிவப்பு நதி பாய்வது போன்று பிரமிக்க வைக்கிறது" என இதனை ஆராய வந்துள்ள சுவீடன் லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வியப்புத் தெரிவித்துள்ளனர்.
சூரியன் அல்லது பூமியின் காந்தப்புலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நண்டுகள் தமது பாதையைத் துல்லியமாகத் தீர்மானிக்கக்கூடும் என அவர்கள் கருதுகின்றனர்.


கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!