news@ilakkiyainfo.com

பிரிவுகள்

குகையொன்றில் குழந்தையைப் பிரசவித்த 15 வயதுச் சிறுமி : குகை-விவகாரம்-கசிந்தது-எப்படி

16 Nov, 2026
உடுதும்பறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரம்பக்கட்டிய பிரதேசத்தில் மலை உச்சியிலுள்ள கல்350 குகை ஒன்றில் தங்கியிருந்தபோது குழந்தையைப் பிரசவித்த 15 வயதுச் சிறுமி தொடர்பான சம்பவத்தில், உடுதும்பறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பச்சிளம் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயதுடைய சந்தேகநபரை 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜெயதிலக உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு நீதிமன்றத்தால் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை விதிக்கப்பட்டவர் நுகேதென்னையைச் சேர்ந்த எம். ரவிச்சந்திரன் (23) என்பவராவார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் உறவினர் எனக் கூறப்படும் 36 வயது நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த நபர் 23 வயதுடைய சந்தேகநபரின் மாமா எனப் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

நக்கல்ஸ் மலைத் தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகில் அமைந்துள்ள மீமுரே, கந்தக்கட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய குறித்த சிறுமி சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததுடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் செய்த முறைப்பாட்டுக்கு இப்பதிலாக உடுதும்பறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பகம்மனவின் வழிகாட்டலின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, அப்பகுதியிலுள்ள கடையொன்றிலிருந்து நாளாந்தம் ஒரு நபருக்குத் தேவையான அளவை விட அதிகமான அரிசியைக் கொள்வனவு செய்த இளைஞர் ஒருவர் குறித்துப் பொலிஸாருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.


அதற்கமைய, குறித்த இளைஞரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொலைவில் காடமைந்த பகுதியில் பொலித்தீன் துணிகளால் மூடப்பட்டிருந்த கல் குகையொன்றுக்குள் இரண்டு மாதக் குழந்தையுடன் இருந்த சிறுவீட்டைக் கண்டறிந்துள்ளனர்.

சிறுமி குகைக்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்ததாகவும், பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையின் தொப்புள்கொடியைக் கித்துள் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தினால் வெட்டித் துண்டித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துந்துள்ளது.

அதேபோல், காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நாட்டு மருந்து வகைகளைப் பயன்படுத்தித் தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளித்துள்ளதாகவும், கித்துள் பாணி காய்ச்சுவதற்குப் பயன்படுத்தும் தாச்சியொன்றில் குழந்தையைக் குளிப்பாட்டியதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட இளைஞரும் அவருக்கு உடந்தையாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் உறவினரும் சனிக்கிழமை (14) உடுதும்பறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட 15 வயது சிறு வயதுத் தாயையும் இரண்டு மாதக் குழந்தையையும் சுத்தப்படுத்தி மேலதிக சிகிச்சைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்துவதற்காக கண்டிதேசிய மருத்துவமனைக்கு மாற்றுவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, சிறு வயதுச் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

உடுதும்பறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நக்கல்ஸ் காப்புக் காட்டின் குகையொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமியும் அவர் ஈன்றெடுத்ததாகக் கூறப்படும் இரண்டு மாதக் குழந்தையின் உடல்நிலை குறித்துக் கண்காணிப்பதற்காக 15ஆம் திகதி கண்டி தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட வார்டுக்குச் சென்று சிறு வயதுத் தாயையும் இரண்டு மாதக் குழந்தையையும் நேரில் பார்வையிட்ட அவர், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியதுடன், இவ்வாறான சம்பவங்கள் காரணமாகச் சிறு வயதுக் குழந்தைகளின் சிறு பிராயமும் கல்வியும் பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை அச்சுறுத்தலான நிலைக்குத் தள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.

குழந்தைகளைக் குறித்த அச்சுறுத்தலான நிலைக்குத் தள்ளும் பெற்றோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்துக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தாயும் சேயும் பாதுகாப்பான முறையில் எதிர்காலத்தைக் கழிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கண்டி தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் நிஹால் வீரசூரிய, தற்போது சிறுமி மற்றும் குழந்தை இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி துஷாரி ஜெயசிங்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!