news@ilakkiyainfo.com

பிரிவுகள்

குடும்பத் தகராறு : மனைவியின் கத்திக்கு இலக்காகி கணவன் பலி!

07 Jun, 2026
ஹொரண, அரம்பகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில், மனைவி நடத்திய மன்னாக் கத்தித் தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளதாக ஹொரண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அரம்பகந்த, தெற்கு மாஹேன பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஷெர்லி குணவர்தன என்ற நபராவார்.

வீட்டிற்குள் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதே இந்த விபரீதத்திற்குக் காரணம் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, கணவன் மன்னாக் கத்தியை எடுத்துக்கொண்டு மனைவியைத் தாக்க முயன்றுள்ளார்; இதன்போது, அவர்களின் மகள்கள் தலையிட்டுத் தகராறைச் சமரசம் செய்ய முற்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இருப்பினும், அதன் பின்னர் மனைவி அதே மன்னாக் கத்தியைப் பறித்து கணவன் மீது பலத்த தாக்குதல்களை நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!