மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நோக்கிய தனது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. Beaches & Islands
இதன்படி, திங்கட்கிழமை (20) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்படும் பயணிகள் உள்நாட்டு தொடர்புகளுக்கு 1979 , சர்வதேச தொடர்புகளுக்கு +94 11 777 1979 , வாட்ஸ்அப் +94 74 444 1979 போன்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தங்களது பயண முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறும், மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!