தம்புள்ளை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், தாய் மற்றும் மகள் என சந்தேகிக்கப்படும் இருவர் மிகவும் லாவகமாக நகைகளைக் திருடும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் கடந்த ஜூன் 19 அன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் காணொளியில், கடை ஊழியரின் கவனத்தைத் திசைதிருப்பி, மிகவும் தந்திரமாக நகை அடங்கிய தட்டுகளைத் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கடை ஊழியர் மற்றொன்றில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில், சந்தேக நபர்கள் இருவரும் இணைந்து மிகத் துல்லியமாக சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
தற்பொழுது இக்காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இவர்களைக் கண்டறியவும், சட்டத்தின் முன் நிறுத்தவும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைத் தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!