சிறுவன் பறக்க விட்டுக்கொண்டிரு பட்டத்தின் சருகு நூலில் சிக்கித் தவித்த கொக்கைக் காப்பாற்ற முற்பட்ட 44 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொனித்தேகம, திவுல்லேகொட பகுதியைச் சேர்ந்த கே.பி. செனவிரத்ன (44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் திருமணம் முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி வேலைகளில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், அன்றைய தினம் மாலை 6 மணியளவில் நபடவெவ குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார். இதன்போது, சருகு நூல் ஒன்றில் சிக்கி, பறக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த கொக்கு ஒன்றைக் கண்டு, அதனைக் காப்பாற்றுவதற்காகக் குளத்தின் ஆழமான பகுதிக்கு நீந்திச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!