news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

23 Jul, 2026
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்துள்ளதாக  அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக நோய் பரவல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை 2,536 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 1,033 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன் இறப்பு விகிதம் 40.7% ஆகப் பதிவாகியுள்ளது.

கொங்கோ நாட்டின் 5 மாகாணங்கள் வரை இந்த வைரஸ் பரவியுள்ள போதிலும், இத்துரி மாகாணமே நோய்த்தொற்றின் பிரதான மையப் பகுதியாக விளங்குகிறது.  

தற்போது 738 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதோாடு,  இதுவரை 506 பேர் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துப் பாதிக்கப்பட்ட மாகாணங்களிலும் பரிசோதனை, நோயாளிகள் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைச் சுகாதார அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன.

எபோலாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்குகளுக்காக கொங்கோ  நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது, நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வுக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!