news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொழும்பில் மர்மத் தாக்குதலில் காயமடைந்த நபர் உயிரிழப்பு – பொலிஸார் விசாரணை

29 May, 2026

கொழும்பு 15, ஹேனமுல்ல முகாம் பகுதியில் வசித்து வந்த 65 வயது நபர் ஒருவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், இது தாக்குதல் காரணமாக ஏற்பட்ட மரணம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், தாக்குதலின் முழுமையான காரணம் மற்றும் பின்னணி குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!