news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொஸ்கமையில் கால்வாயில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

16 May, 2026

கொஸ்கம, தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து இருவரின் உடல்களும் கொஸ்கம, சாலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சடலங்கள் தொடர்பான மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!