-43,149.86 ஏக்கர் காணிகளை நிபந்தனையின்றி விடுவியுங்கள்- -முல்லை.ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ரவிகரன் எம்.பி காட்டம்-
முல்லைத்தீவு மாவட் டத்தில் வனவள திணைக் களம் ஆக்கிரமித்துள்ள மக்களுடைய 17,469 ஹெக்ரெயர் காணிகளை நிபந்தனையின்றி உடன் விடுவிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், காணிகளை விடுவிக்க ஆவணம் கேட் பவர் யுத்தத்தை நடத்தி மக்களை ஓட..ஓட.. விரட் டிய கோத்தபாய ராஜப க்ஷவிடம் கேட்குமாறும், யுத்தத்தை நடத்தி ஆவணங்களை அழித்ததற் காக கோத்தபாய மீது வழக்கு தொடருமாறும் கூறியுள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக் கையில்,
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 3,013.96 ஹெக்டயர் காணிகளும், புதுக்குடியிருப்பில் 5,131.13 ஹெக்டயர் காணிகளும், ஓட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 7,266.04 ஹெக்டயர் காணிகளும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 399.80 ஹெக்டயர் காணிகளும், மாந்தை கிழக்கில் 1,231.37 ஹெக்டயர் காணிகளும், மாணாலாறு பிரதேசத்தில் 427.28 ஹெக்டயர் காணிகளும் வனவளத் மற்றும் வனஜீவரசிகள் திணைக்களங்களின் பிடியில் உள்ளன.
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 17,469.58 ஹெக்ரெயர் காணிகள் அதாவது ஏறத்தாள 43,149.86 ஏக்கர் காணிகள் மக்களுடையவை, இன்று அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு மக்களிடம் ஆவணங்களை கேட்கிறார்கள்.
ஆனால், ஆவணங்கள் கோரப்படாமல் விடுவிக்க 2023ஆம் ஆண்டிலேயே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாறாக தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
யுத்த நிலமைகளால் மிகவும் மோசமாக பாதிக் கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் இவ்வாறு காணி ஆவணங்களைக் கோரவே முடியாது.
அவ்வாறு ஆவணங் கள் கோரப்படவேண்டும் என்றால், அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்து யுத்தத்தை நடாத்தி மக்கள் மீது குண்டுகளைப் போட்டு துரத்தியடித்த, கோத்தபாய ராஜபக்சவிடமும், யுத்தத்தை நடாத்தியவர்களிடமே ஆவணங்களை கேளுங்கள்.
அல்லது இவ்வாறு மக்கள் மீது குண்டுகளை வீசி, அவர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்புக்குள்ளாக்கி மக்களை ஆவணங்களின்றி அகதிகளாக ஓடச் செய்த கோத்தபாய ராஜபக் சவிற்கு எதிராகவும், யுத்தத்தை நடாத்தியவர்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவுசெய்யுமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!