கம்பஹா - கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் தம்பதியினர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கிஹான் யந்தில ராஜபக்ஷ (வயது 26) மற்றும் அவரது மனைவியான நதிசா தேஜா (வயது 21) ஆகிய இளம் தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் தங்களது வேலை ஸ்தலத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே, வெள்ளிக்கிழமை (09) அன்று காலை 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிரிந்திவலை பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை (இல.போ.ச) பேருந்து கம்பஹாவிலிருந்து கிரிந்திவலை நோக்கிப் பயணித்ததாகவும், மோட்டார் சைக்கிள் கிரிந்திவலையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்ததாகவும் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!