news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சட்டத்தின் ஆட்சியும் மீதமுள்ள எதிர்பார்ப்பும்

12 Oct, 2026


உரிய காலம் வந்தால் எல்லாம் மாறிப் போகும் என்­பதை நாம் பல­முறை கண்­டி­ருக்­கின்றோம் . ஒரு காலத்தில் சட்­டத்தை சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு இருப்­ப­வர்கள் போல நடந்து கொண்­ட­வர்­களை இப்­போது சட்டம் 'சட்டை செய்­யாமல்' இறுக்­கு­வ­தையும் இப்­போது காண்­கின்றோம்.  

என்.பி.பி. கட்­சியும் அப்­போது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இருந்த அநுரகுமார திசா­நா­யக்­கவும் இந்த நாட்டின் ஆட்சி அதி­கா­ரத்தை தங்­க­ளுக்குத் தந்தால் நாட்டில் ஊழல் மோச­டியை நீக்­குவோம், நீதியை நிலை­நாட்­டுவோம், இன­வாதத்தை இல்­லாமல் ஒழிப்போம், நாட்டை வெற்­றி­க­ர­மாக முன்­னேற்­றுவோம் எனப் பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­னார்கள்.

புதிய அர­சாங்கம் ஆட்சி பீட­மேறி இரண்டு வரு­டங்கள் நிறை­வ­டை­கின்ற நிலையில் கூட பல வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்­லையே என்ற விமர்­ச­னங்கள் எழத்­தொ­டங்­கி­யி­ருந்த ஒரு பின்­ன­ணியில், இப்­போது ஊழல்கன், குற்­றங்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

நீதித்துறை, சட்ட அமு­லாக்கல் துறை போன்­ற­வற்­றுக்கும் அர­சாங்­கத்­துக்கும் தொடர்­பில்லை என்று கோட்­பாட்டு ரீதி­யாக கூறு­வார்கள். ஆனால், யார் ஆட்­சியில் இருக்­கின்­றார்கள், அவர்­க­ளது கொள்கை என்ன? என்­பதைப் பொறுத்தே இத்­து­றை­களின் செயற்­பா­டுகள் அமைகின்றன என்ற யதார்த்­தத்தை நாம் பல­முறை கண்­டி­ருக்­கின்றோம்.

இப்­போது நீதித்­து­றையின் சுயா­தீனம் ஓர­ள­வுக்கு மீள உயிர்ப்பெற்­றுள்­ளது அல்­லது அப்­ப­டி­யான ஒரு தோற்­றப்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இலஞ்சக் குற்­றச்­சாட்டில் நாமல் ராஜ­பக் ஷ  கைது செய்­யப்­பட்டு பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.  

இதற்­கி­டையில், ஞான­சார தேர­ருக்கு மத நிந்­தனைக் குற்­றச்­சாட்டின் கீழ் ஏற்­க­னவே வழங்­கப்­பட்ட சிறைத்­தண்­டனை தீர்ப்பை நீதி­மன்றம் மீள உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றது. இந்த நாட்டின் முதற் பெண்­ம­ணி­யாக ஒரு­கா­லத்தில் கோலோச்­சிய ஷிரந்தி  ராஜ­பக் ஷ கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார்.

இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான முக்­கிய வழக்கொன்றின் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.  இவ்­வாறு அடுத்­த­டுத்து கைதுகள் இடம்­பெ­று­வதால், இதற்­க­டுத்­த­தாக யார் கைது செய்­யப்­ப­டு­வாரோ என்ற கேள்­வி­யையும், தவறு செய்­த­வர்­க­ளி­டையே ஒரு­வித பதற்­றமும் ஏற்­பட்டு இருப்­ப­தாக தெரி­கின்­றது.

இந்த நாட்டில் ஏற்­கெ­னவே பல துறை­க­ளிலும் புரை­யோடிப் போயி­ருந்த மோச­டி­யான, ஊழல்­மிக்க, நீதிக்குப் புறம்­பான செயற்­பா­டு­களை மாற்­றி­ய­மைப்போம் என்று கூறிய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் மக்கள் ஆணையை கோரி­யது.

தற்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவின் வாக்­கு­று­தியை நம்­பியே மக்கள் வாக்­க­ளித்­தனர். மாறாக இந்த வாக்­குகள் என்.பி.பி.க்கு அல்­லது ஜே.வி.பி.க்கு கிடைத்­தவை எனக் கருத  முடி­யாது.

ஆகவே, ஆட்­சிக்கு வந்து கிட்­டத்­தட்ட இரண்டு வரு­டங்கள் ஆகிக் கொண்­டி­ருக்­கின்ற சூழ­லிலும் இந்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வில்லை என்ற விடயம் கடு­மை­யான விமர்­ச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்தச் சூழ்­நி­லை­யி­லேயே ஊழல்­வா­திகள், சட்­டத்தை மீறி­ய­வர்கள், பயங்­க­ர­வாத செயற்­பாட்­டுக்கு உத­வி­ய­வர்கள், பாலியல் குற்­ற­வா­ளிகள், போதைப்பொருள் வியா­பா­ரிகள் சட்­டத்தின் பிடிக்குள் இறுக்­கப்­ப­டு­கின்­றனர். நீதி­மன்ற கட்­ட­மைப்பும் பல­ம­டைந்­துள்­ள­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.

கத்­தோ­லிக்க சமூகம் மட்­டு­மன்றி இந்த நாட்டில் உள்ள அநேக மக்­களின் எதிர்­பார்ப்­பாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் நீதி விசா­ர­ணை­களில் ஒரு குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. பிர­தான குற்­ற­வா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தீர்ப்பே இதற்குக் காரணம் எனலாம்.

 ராஜ­பக் ஷ  குடும்­பத்தின் மீது யாரும் கை வைக்க மாட்­டார்கள் என்ற பொது­வான அபிப்­பி­ராயம் இருந்­தது. ஆனால், அவர்கள் செய்­த­தாக சொல்­லப்­ப­டு­கின்ற ஊழல்­களுள் சிறிய ஒன்றைப் பயன்­ப­டுத்தி, அதா­வது சிறிய மீனைப் போட்டு பெரிய ஆட்கள் பிடிக்­கப்­ப­டு­கின்­றார்கள்.

மஹிந்த  ராஜ­பக் ஷவை தேசத்தை மீட்ட ஒரு­வ­ரா­கவே சிங்­கள மக்கள் பார்க்­கின்­றனர். அவர் இப்­போது உடல் ரீதி­யாக மிகவும் பல­வீ­ன­முற்று இருக்­கின்றார். அவரில் கைவைத்தால் பெரும் குழப்பம் ஏற்­படும் என்று கரு­து­வோரும் உள்­ளனர். அதற்குக் கார­ணங்­களும் இல்­லா­ம­லில்லை.

ஆனால், போகின்ற போக்கைப் பார்த்தால் முந்­தைய ஆட்­சி­யா­ளர்கள், அதி­கா­ரிகள் என யார் கைது செய்­யப்­ப­ட­மாட்­டார்கள் என்­பது இப்­போது அவர்­க­ளுக்கே நிச்­ச­ய­மில்­லாமல் போயி­ருக்கும்.

ஒரு நீதி­ய­ர­ச­ரையே மாற்­றி­ய­வர்­க­ளுக்கு இப்­போது நீதியே அச்­ச­மூட்­டு­வ­தாக மாறி­யி­ருக்­கின்­றது.

அதேபோல், அதி­கார வர்க்­கத்தின் திரை­ம­றைவு ஆத­ரவில் செயற்­பட்டுக் கொண்டு, நீதி­மன்­றத்­தையும் சட்ட நடை­மு­றை­க­ளையும் கேலிக்­குள்­ளாக்கும் விதத்தில் செயற்­பட்ட  கல­கொட அத்தே ஞான­சார தேரர் இப்­போது சிறைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

அவர் தெளி­வா­கவே இன­வா­தத்தை விதைத்­தவர் என்­பது தெரிந்­தி­ருந்தும் கூட, அவ­ரது 'சிவுறு ஆடை' கழற்­றப்­பட்டு, கைதி ஆடை அணி­விக்கப்­பட்ட விட­யத்தை முன்­னி­றுத்தி ஒட்­டு­மொத்த பௌத்த பீடங்­களும் அர­சாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்­கின.

இது அவ்­வ­ளவு நல்ல சூழ­லல்ல. என­வேதான் ஜனா­தி­பதி மிகக் கவ­ன­மாக மகா ­சங்­கத்­தி­ன­ருடன் பேசி வழி­ய­னுப்­பி­யி­ருக்­கின்றார்.  இந்த நாட்டில் மகா நாயக்க தேரர்கள் மிகப் பெரிய தீர்­மா­னிக்கும் சக்தி என்­பதை சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

எனவே, இந்தக் கைதுகள், சிறைப்­ப­டுத்­தல்கள் நீதியின் ஆட்­சியை எடுத்­தி­யம்­பு­வ­தாக நாம் கரு­தி­னாலும் கூட, இந்தச் சம்­ப­வங்­களை மிகக் கவ­ன­மாக கையாள வேண்டும். முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் இந்த கைது­களை கொண்­டா­டு­வதை    தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

காலம் இப்­ப­டியே இருக்கப் போவ­தில்லை; நாளை, அடுத்த வருடம் என்ன நடக்கும் என்­பது தெரி­யாது. யார் அடுத்­த­டுத்த பட்­டி­யலில் இருக்­கின்­றார்கள், யார் மீண்டும் ஆட்சிக்கு வரு­வார்கள்,  அப்­போது இதுவே தலை­கீ­ழாக மாறிப் போகுமா என்­ப­தெல்லாம் நமக்குத் தெரி­யாத விட­யங்கள் என்­பதால் மிகப் பக்­கு­வ­மாக இவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

இதே­வேளை, நீதி விசா­ர­ணை­களில் முன்­னேற்றம் இருந்­தாலும் கூட இன்னும் பல விவ­கா­ரங்கள் கிடப்பில் கிடக்­கின்­றன. எனவே, அது தொடர்பாக சட்­டத்­தையும் நீதியின் ஆட்­சி­யையும் நிலை­நாட்ட வேண்டும் என்ற மக்­களின் எதிர்­பார்ப்பை அரச இயந்­திரம் சட்­டப்­படி பூர்த்தி செய்ய வேண்டும்.


குறிப்­பாக, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் குற்­ற­வா­ளிகள் இனம் காணப்­பட்­டாலும் இது யாரு­டைய தேவைக்­காக மேற்­கொள்­ளப்­பட்­டது, இதன் பின்னால் யார் இருந்­தனர் என்­பது இன்னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

இந்த தாக்­குதல் நாட்டில் ஆட்சி மாற்­ற­மொன்றை கொண்டு வரு­வ­தற்­காக 2019 இல் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை என்.பி.பி. கட்சி அர­சி­யல்­வா­தி­களே சொல்­லி­யி­ருக்­கின்­றார்கள். வேறு பலரும் இக்­க­ருத்தை வெளி­யிட்­டனர்.

எனவே அப்­போது ஆட்­சியில் இருந்து கொண்டு பொறுப்பை தட்டிக் கழித்­த­வர்கள், சந்­தர்ப்ப­த்தை பயன்­ப­டுத்தி ஆட்­சியை புரட்­டி­ய­வர்கள் எல்லாம் இத­னுடன் தொடர்­பற்­ற­வர்­களா என்­ப­தையும் அப்­ப­டி­யென்றால், இதன் பின்னால் இருந்த பிர­தான திட்டம் என்ன, அது யாரு­டை­யது என்­ப­தையும் கண்­ட­றிந்து மக்­க­ளுக்கு கூற வேண்டும். அதனையே கத்­தோ­லிக்க சமூ­கமும் வலி­யு­றுத்­து­கின்­றது.

அதே­போன்று, 2012 ஆண்டு படு­கொலை செய்­யப்பட் றக்பி வீரர் வசீம் தாஜூதீன் விவகார வழக்கு இன்னும் கிடப்பில் கிடக்­கின்­றது. இதன் கோப்­பு­க­ளையும் தூசு­தட்ட வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான லசந்த விக்­கி­ர­மதுங்க கொலை, பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­கா­ரங்­க­ளுக்கு விசா­ர­ணைகள் முடி­வு­றுத்­தப்­பட வேண்டும்.

ஆயுதக் குழுக்­களால் முஸ்­லிம்கள் கடத்­தப்­பட்­டமை, கொல்­லப்­பட்­டமை, துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டமை போன்ற அநி­யா­யங்­க­ளுக்கு இந்த அர­சாங்­கத்தின் காலத்­தி­லேயே நீதி கிடைக்­கா­விட்டால் வேறு எந்தக் காலத்­திலும் கிடைக்­காது.

மத்­திய வங்கி பிணை முறி மோசடி உள்­ளிட்ட நிதிசார் விவ­கா­ரங்­க­ளுக்கும், செம்­மணி மனித புதை­குழி, குருக்­கள்­மடம் மனிதப் புதை­குழி உள்­ளிட்ட மனிதப் பேர­வ­லங்­க­ளுக்கும் ஏதோ ஓர் அடிப்­ப­டையில் நீதி கிடைக்க வழி­செய்ய வேண்டும்.

மிக முக்­கி­ய­மாக, கொவிட் வைரஸ் தொற்றுக் காலத்தில் எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்களும் இன்றி முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அப்போது ஜே.வி.பி. இது விடயத்தில் சற்றுக் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டாலும் பிறகு இதன் உண்மைத் தன்மையை விளங்கிக் கொண்டது எனலாம்.

எனவே, இதற்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகள் யார், அதனை நடைமுறைப்படுத்தி அதிகாரிகள் யார் எனக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும். முஸ்லிம்களின் விடயத்தை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் இந்த அரசாங்கமும் நோக்கக்கூடாது.

நீதித்துறையை சுயாதீனமாகச் செயற்பட வழிவகுப்பதுடன் மட்டும் அரசாங்கம் நின்று விடக் கூடாது. அது மட்டுமே என்.பி.பி.யின் 'முன்னேற்ற அறிக்கையின்' எல்லாப் பக்கங்களையும் நிரப்பி விடாது. மாறாக, நீதிக்கு மேலதிகமாக சமூக, பொருளாதார துறைகள் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பையும் நிவர்த்திப்பதற்கு  பாடுபட வேண்டும்.

-ஏ.எல். ஏ.நிப்றாஸ்-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!