news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சதாம் உசேன் பயன்படுத்திய ஆடம்பர விமானம் ஏலத்திற்கு!

25 Nov, 2026
ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேன் பயன்படுத்திய ஆடம்பரமான வி.ஐ.பி. விமானம் உள்ளிட்ட இரண்டு அரிய வகை போயிங் 747 விமானங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு ஈராக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அரசுச் செய்திகள்

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடாப் போரின்போது, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த விமானங்கள் துனிசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேசத் தடைகள் மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக, கடந்த 35 ஆண்டுகளாக இந்த விமானங்கள் துனிசியாவில் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், படுக்கையறை, மாநாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு ஆடம்பர வசதிகளைக் கொண்ட சதாம் உசேனின் வி.ஐ.பி. விமானம் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு போயிங் 747 விமானம் ஆகிய இரண்டையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை ஈராக் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு விமானங்களுக்கும் தலா 9 இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஆரம்ப ஏல விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், முற்பணமாக 1.8 இலட்சம் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 1.66 கோடி ரூபாயாகும்.

பல தசாப்தங்களாகப் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விமானங்களை அருங்காட்சியகத் தேவைக்காகவோ அல்லது உதிரிப் பாகங்களுக்காகவோ வாங்குவதற்கு யார் முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!