சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருவது நடிகை ஜெனிலியா அணிந்திருந்த பழைய 5 ரூபாய் நாணய வடிவிலான காதணி ஆகும்.
இந்தியாவின் மும்பையின் பாந்த்ரா பகுதியில் அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் ஜெனிலியா இந்த வித்தியாசமான காதணியை அணிந்து கலந்துகொண்டிருந்தார்.
பழைய 5 பைசா நாணயத்தில் இருப்பது போலவே '5' என்ற எண் தெளிவாகத் தெரியும் வகையில் விண்டேஜ் தோற்றத்தில் இது உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஆபரணமாக இது காட்சியளிக்கிறது.
சாதாரண பழைய நாணயத்தைப் போலத் தோன்றினாலும், இது ஒரு பிரத்யேக டிசைனர் ஆபரணமாகும்.
இந்தத் காதணியின் மதிப்பு இந்திய பெறுமதி 1.8 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை இருக்கும் எனவும் இலங்கை பெறுமதி ரூபாய் 6 இலட்சம் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.தீவுகள் ஆராயுங்கள்
பழைய நினைவுகளைத் தூண்டும் நாணய வடிவமைப்பை நவீன பேஷனுடன் இணைத்த ஜெனிலியாவின் இந்த ஸ்டைல் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாணய வடிவிலான காதணிகள் மற்றும் ஆபரணங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!