news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சமையல் உலகில் "ஆஸ்கார்” விருது பெற்ற யாழ்பாணத்து தமிழன்!

02 Aug, 2026
இது ஏன் வரலாற்றுச் சாதனை?

சமையல் உலகில், 'Gault & Millau' வழிகாட்டி என்பது திரைப்படத் துறையில் வழங்கப்படும் "ஆஸ்கார்” விருதுக்கு இணையான கௌரவ- மாகக் கருதப்படுகிறது. சுவை, தரம், படைப்பாற்றல் மற்றும் சமையல் நுணுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிபுணர்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான உணவகங்களில் இருந்து மிகச் சிலரே இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள். 

அத்தகைய உயர்குடிப் பட்டியலில் பாரிஸின் மையப்பகுதியில் ஒரு ஈழத்தமிழரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது, தமிழர்களின் உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைத்திறமைக்குச் சான்றாகும்.




பின்னணியும் பெருமையும்:
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிரோஜன் குலசிங்கம், வெறும் கனவுகளுடன் பிரான்ஸ் நாட்டிற்கு வந்தவர். இத்தாலிய சமையல் கலையில் தேர்ச்சி பெற்று, கடந்த பத்து ஆண்டுகளாக பாரிஸில் தன் திறமையை நிரூபித்து வருபவர். 

இன்று 'Gault & Millau' வழிகாட்டியில் அவர் “யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்” என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டிருப்பது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த மற்றும் நெகிழ்ச்சியான தருணமாகும். 

இதுவரைகாலம் இல்லாத இந்த அங்கீகாரம், ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும், தங்களது அடையாளத்தை உலக அரங்கில் காண்பதற்கான உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த வரலாற்றுச் சாதனையை உலகளாவிய தமிழ் பேசும் சமூகத்திடையே கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம். இந்த மைல்கல் உலகெங்கிலும் உள்ள இளம் தமிழ் கனவு காண்பவர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகமாக அமைவதற்கு உங்கள் ஆதரவு இன்றியமையாதது.


சமையல் கலைஞர் நிரோஜன்அவர்களின் அறிக்கை:

"இந்த அங்கீகாரம் எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல இது எனது மக்கள், எனது நிலம் மற்றும் எனது தாய்மொழியான தமிழுக்கு நான் சமர்ப்பிக்கும் மரியாதை. குறிப்பாக, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு ஈழத்தமிழனாக இந்த வழிகாட்டியில் இடம்பெற்றிருப்பது எனது வாழ்வின் மிக உன்னதமான தருணம். 

பல தமிழர்கள் வெளிநாடுகளில் வெற்றிகளை அடைந்தாலும், அவை பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படுவதில்லை என்பது எப்போதும் என்னை வருத்தமடையச் செய்தது. 

ஒரு எளிய பணியாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினாலும், தெளிவான இலக்குகளுடனும், முறையான கடின உழைப்புடனும் செயல்பட்டால், பாரிஸ் போன்ற உலக நகரங்களில் தமிழர்கள் சிகரத்தைத் தொட முடியும் என்பதற்கு இதுவே சான்று. 

உலக அரங்கில் நமது சமூகத்தின் பெருமையை முன்னிறுத்துவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்,” என்று அவர் மிகுந்த உணர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

கருத்துகள் (Comments)

K
Kulasingam Nirojan Aug 29, 2026

இலக்கியா இன்போ இணையதளத்தில் எனது சமையல் பயணம் மற்றும் Gault & Millau வழிகாட்டியில் இடம்பெற்ற சாதனை குறித்து எழுதியமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்பார்ப்பதுடன், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குச் சிறந்த சமையல் கலை அனுபவத்தைத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
Thank you very much to Ilakkiya Info for featuring my culinary journey and the recognition in the Gault & Millau guide. I am deeply honored and committed to bringing the best of Italian gastronomy while making our community proud