சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயைப் பாதுகாப்பதற்காகவே தான் பிரத்யேகப் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதாக அவர் சமீபத்தில் இந்தியில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
நடிகரும் பாடிபில்டருமான கேதன் கரண்டே என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயிடம் பாதுகாப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

கேதன் கரண்டே
சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயைப் பாதுகாப்பதற்காகவே தான் பிரத்யேகப் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதாக அவர் சமீபத்தில் இந்தியில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். இத்தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் அவர், "சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஐஸ்வர்யா ராயின் பாதுகாப்பாளராகப் பணியாற்றினேன். குறிப்பாக, சல்மான் கானிடமிருந்து அவரைப் பாதுகாப்பதற்காகவே நான் பணியில் அமர்த்தப்பட்டேன்.
ஒருவேளை இந்த விஷயம் சல்மான் கானுக்கும் தெரிந்திருக்கலாம். அப்போது ஐஸ்வர்யா 'குச் நா கஹோ' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து, படப்பிடிப்புத் தளத்தில் விடுவதே என்னுடைய முக்கிய வேலையாக இருந்தது.
Salman Khan & Aishwarya Rai
ஒருமுறை ஐஸ்வர்யா மேடத்தை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் காரில் ஏறிப் புறப்படத் தயாரானபோது, நேர் எதிரே சல்மான் கான் நின்று கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது.
என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் காரை விட்டு இறங்கிச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால், டிரைவர் 'நீங்கள் இறங்க வேண்டாம்' என்று சொல்லிவிட்டு, உடனடியாகக் காரை வேறு திசையில் திருப்பி வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார்" எனப் பகிர்ந்திருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!