news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிங்கள பௌத்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி மீண்டும் பாதயாத்திரை ; போதி தர்ம சர்வதேச மனித அகிம்சை அமைப்பு அழைப்பு

28 Oct, 2026
எதிர்வரும் 30ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன்பாக ஆரம்பித்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதில் பிக்குமார்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் போதி தர்ம சர்வதேச மனித அகிம்சை தெரிவித்துள்ளது.

அனைத்து சிங்கள பௌத்தர்களும் கட்சி பேதமின்றி வெள்ளை ஆடைகளை அணிந்து, மணம் வீசும் மலர்களுடன் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (27)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைப்பின் தலைவர் இரத்தினபுரி போதிதர்ம தேரர் தெரிவித்துள்ளார். மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30ஆம் திகதி அனைத்து சிங்கள பௌத்தர்களும் கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை முன்பாக ஒன்றுகூட வேண்டும். காலை 10 மணிக்கு சமய நிகழ்வுகளை நிறைவு செய்த பின்னர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளோம். இந்தப் பாதயாத்திரையில் தேரர்கள் பங்கேற்கமாட்டார்கள். கட்சி பேதமின்றி அனைத்து சிங்கள பௌத்தர்களும் மாத்திரம் இதில் கலந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காகவும், எமது இனம், நாடு மற்றும் சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிங்கள பௌத்தர்களின் ஒற்றுமையையும் பலத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதுடன், நாட்டுக்கும் சம்புத்த சாசனத்துக்கும் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்தப் பாதயாத்திரையின் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய முன்பாக மூன்று நிக்காயாக்களையும் சேர்ந்த தேரர்களை ஒரே நோக்கத்தின் கீழ் ஒன்றிணைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!