"சினிமா இல்லையென்றால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்!" மனம் திறந்த மிர்னாலினி ரவி.
டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்து, பின்னர் 'சூப்பர் டீலக்ஸ்', 'எனிமி', 'கோப்ரா' போன்ற படங்கள் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை மிர்னாலினி ரவி. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா பிரவேசம் மற்றும் சவால்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
"நான் விளையாட்டாக செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான் எனக்கு சினிமா வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தன. பட வாய்ப்புகளுக்காக நான் அவற்றைச் செய்யவில்லை, என் அதிர்ஷ்டம் தான் என்னை சினிமாவிற்குள் கொண்டு வந்தது," என்று கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சினிமாவுக்கு அனுப்பத் தயங்கிய தனது பெற்றோர்கள், இப்போது தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தன் மீதான விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், அதுவே தனது பிளஸ் பாயிண்ட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்குத் தயக்கம் இல்லை. நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் எனக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் அதில் காதல் இருக்க வேண்டுமே தவிர முகம் சுழிக்கும் வகையில் இருக்கக்கூடாது," எனத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒருவேளை சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், மேல்படிப்பு (MS) முடித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன் என்றும் மிர்னாலினி ரவி தெரிவித்துள்ளார்.
மனதுக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தற்போது அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!