சிறுமி துஷ்பிரயோக வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் ; புதைக்கப்பட்டிருந்த இரத்தம் தோய்ந்த ஆடை மீட்பு
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பான விசாரணைகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரான தேரர் குறித்த சிறுமியை துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், இரத்தம் தோய்ந்த சிறுமியின் உள்ளாடை புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பல முக்கிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் தேரரை கைது செய்வதை தாமதப்படுத்தியதாகவும், இதனால் அவர் தலைமறைவாக இருக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் விசாரணைகளில் சிறுமியின் காணொளி ஆதாரங்கள் கூட முழுமையாக பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை முழுவதும் சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், தேரரும் சிறுமியும் இடையே 84 தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை தரவு பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தேரர் தனது மத, நிதி மற்றும் அதிகார செல்வாக்கை பயன்படுத்தி விசாரணைகளை பாதிக்க முயற்சிப்பதாகவும் சட்டத்தரணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சந்தேகநபரை கைது செய்வதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் பொலிஸாரை தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!