மட்டக்களப்பு பிரதேசமொன்றில் வீட்டில் தனிமையில் இருந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாகக் கூறப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கணக்கெடுப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் 51 வயதுடைய நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (06) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி குறித்த வீட்டின் குடிநீர் பாவனை அளவை கணக்கெடுப்பதற்காக (மீற்றர்) குறித்த உத்தியோகத்தர் அங்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் சிறுவன் தனிமையில் இருந்த நிலையில், அவரது அந்தரங்க உறுப்பைப் பிடித்து பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக சிறுவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த உத்தியோகத்தரை நேற்று முன்தினம் (05) திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர் நேற்iறையதினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!