news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிவில் உடையில் நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்

06 Oct, 2026

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (06) செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


நேற்று (05) திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலைப்பட்டு, அவரது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய தினம் சிறைச்சாலையின் கைதிகளுக்கான சீருடையில் கொழும்பு மேல் நீதிமன்ற பிடியாணைத் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார்.


கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நிலுவையிலுள்ள பிடியாணை உத்தரவின் அடிப்படையிலேயே ஞானசார தேரர் இன்று நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!