news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சீரற்ற காலநிலையால் புத்தளம் – கொழும்பு பிரதான வீதி பாதிப்பு

22 May, 2026
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதி பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதால், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மாதம்பே பகுதியில் வீதிகள் முழுமையாக மழைநீரால் மூழ்கியுள்ளதுடன், குதிரைக் கோவில் பகுதியில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, குறித்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அவசர தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும், சீரற்ற காலநிலை தொடரும் அபாயம் காணப்படுவதால், பயணத்தின் போது வாகன வேகத்தைக் குறைத்துப் பாதுகாப்பாக இயக்குமாறும், குறிப்பாக இரவு நேரங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வானிலை மற்றும் போக்குவரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!