news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சீரற்ற வானிலையால் அதிரடி உத்தரவு!

15 May, 2026

மத்திய மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (மே 15) சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்த உத்தரவின்படி, நாளைய தினம் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களையும் வேறு எந்தவொரு கல்விச் செயல்பாடுகளுக்காகவோ அல்லது கூட்டங்களுக்காகவோ பாடசாலைகளுக்கு அழைக்கக் கூடாது என அதிபர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!