சுன்னாகம் மற்றும் கெஸ்பாவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில் சிக்கி இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
சுன்னாகம் -மானிப்பாய் - சுதுமலை வீதி
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த சுதுமலை, தாவடி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண், சுன்னாகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பாவ-கோணமடித்த பகுதி
கெஸ்பாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணமடித்த பகுதியில் இருந்து 5ஆம் சந்தி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் நடந்து சென்ற பாதசாரி பெண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த மடபாத்த பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண், பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வீதி விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!