மட்டக்களப்பு புவியியல் திணைக்கள அதிகாரி ஒருவர் செய்த முறையீட்டின் பேரில், கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சுமணரதன தேரரினால் நிர்மாணிக்கப்பட்ட குளம் ஒன்றுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டு, மட்டக்களப்பு புவியியல் திணைக்களத்தின் தலைவர் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அம்பிட்டியே சுமணரதன தேரர் சில ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு பன்சல்கல் ராஜமகா விகாரைக்கு அருகில் குளம் ஒன்றை நிர்மாணித்து, பிரதேச விவசாயிகளின் நெற்செய்கை மற்றும் நிலப்பயிர்ச் செய்கைக்கும், விகாரையின் செய்கை நடவடிக்கைகளுக்கும் நீர் பெற்றுக்கொள்ள வழிவகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை (08) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மீண்டும் செவ்வாய்க்கிழமை (08) ஆஜர்படுத்தப்பட்டபோது செப்டெம்பர் 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!