news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சுமந்திரனுக்கு ஜனாதிபதி அநுர முன்னுரிமை வழங்கியதால் என்.பி.பி (NPP) குள்ளேயே வெடித்த விமர்சனம்!

23 May, 2026

மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகம் மற்றும் அங்கு அரங்கேறிய அரசியல் நகர்வுகள் தொடர்பில் தற்போது தென்னிலங்கையிலும் வடகிழக்கிலும் பல வாதப் பிரதிவாதங்கள் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான அமரர் இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கைகளில் சிங்கக்கொடியை ஏந்தி, அதன் மூலம் சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் ஒரு முக்கிய அரசியல் செய்தியைக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) மேதினக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, அதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டு அரசியல் தளத்தில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தார்.


இவ்வாறான வரலாற்றுப் பின்னணிகளுக்கு மத்தியில், தற்போது மட்டக்களப்பு நூலகத்தைத் திறந்து வைக்க வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அங்கு வந்திருந்த ஏனைய தமிழ் அரசியல் பிரதிநிதிகளை விடவும், எம்.ஏ.சுமந்திரனுக்கு விசேட முன்னுரிமை கொடுத்துக் கையாண்ட விதம் அரசியல் வட்டாரங்களில் மிகப்பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, ஜனாதிபதியின் இந்த அரசியல் நகர்வை ஆளும்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் (NPP) முக்கியஸ்தர் ஒருவரே பகிரங்கமாக விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளார். வடகிழக்கில் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தலைவர்களை விடுத்து, சுமந்திரனுக்கு மட்டும் அரசாங்கம் ஏன் இந்தளவிற்கு முக்கியத்துவம் வழங்கி முன்னிலைப்படுத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விவகாரம் தற்போதைய அரசாங்கத்திற்குள்ளும் ஒரு விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!