news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சூர்யா - ஜோதிகா திருமணம் : பிரம்மாண்ட கோட்டைக்கு எவ்வளவு செலவு தெரியுமா?

19 Sep, 2026
நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் முக்கியமானவர்களாக வலம் வருகின்றனர். இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தங்களது திருமண நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். 

இந்த சிறப்பு தருணத்திற்காக சூர்யா - ஜோதிகா தேர்வு செய்த இடம்தான் தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள பிளேர்குஹான் கேஸ்டில் (Blairquhan Castle) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் அவர்கள் 20-வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளனர்.

பிளேர்குஹான் கேஸ்டில், ஸ்காட்லாந்தின் ஐஷைர் பகுதியில் உள்ள மேபோலே நகருக்கு அருகே அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்டுக்குள் இந்த பிரம்மாண்ட கோட்டை அமைந்துள்ளது. 

திருமணங்கள் உள்ளிட்ட பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோட்டையின் பிரதான கட்டிடத்தில் 15 படுக்கையறைகள் உள்ளன. இதுதவிர, விருந்தினர்கள் தங்குவதற்காக தனித்தனி குடில்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அந்த திருமணத்திற்காக அவர்கள் செய்த செலவு பற்றி பார்க்கலாம்.

60 விருந்தினர்களுக்கான பேக்கேஜ் சுமார் 21,350 பவுண்டுகள் எனவும், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.27.4 லட்சம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், 80 பேர் பங்கேற்கும் பேக்கேஜின் கட்டணம் 24,350 பவுண்டுகள், அதாவது சுமார் ரூ.31.2 லட்சம் வரை இருக்கும். இந்த பேக்கேஜ்களில் கோட்டையை பிரத்யேகமாக பயன்படுத்துவதற்கான கட்டணம் மற்றும் உணவு உள்ளிட்ட சில ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன் நிகழ்ச்சியை நடத்த விரும்புபவர்களுக்கும் தனி திட்டங்கள் உள்ளன. 30 பேருக்கான பேக்கேஜ் 20,560 பவுண்டுகள் எனவும், 50 பேருக்கான பேக்கேஜ் 23,560 பவுண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இவை முறையே சுமார் ரூ.26.4 லட்சம் மற்றும் ரூ.30.2 லட்சம்.

பிளேர்குஹான் கேஸ்டிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான உணவு ஏற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பருவத்துக்கு ஏற்ற புதிய பொருட்களை பயன்படுத்தி மெனுக்களை தயாரிக்கும் கேட்டரிங் நிறுவனங்களுடன் கோட்டை நிர்வாகம் இணைந்து செயல்படுகிறது. 

விருந்தினர்களின் உணவு விருப்பங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மெனுவை மாற்றியமைக்கும் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

பசுமையான காடுகள், திறந்தவெளிப் பகுதிகள், மலைப்பாங்கான இயற்கை சூழல் என ஸ்காட்லாந்தின் அழகிய பின்னணியில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில்தான் சூர்யா - ஜோதிகாவின் 20 ஆண்டு திருமண கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!