news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திதாள்களில் உணவுகளை மடித்து வழங்க தடை

08 Jun, 2026
மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் (2018) சட்டத்தின் கீழ் செய்தித்தாள்களில் வடை, சமோசா, போண்டா உள்ளிட்ட உணவுப் பண்டங்களைப் பொட்டலமாக கட்டி விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“செய்தித்தாள்களில் உள்ள எழுத்துகளின் மை, உணவுகளில் கலந்து உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்; எனவே, பொதுமக்கள் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழைய செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்களை மடித்துக் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனை மீறிச் சட்டத்தை மதிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் கறுப்பு மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், சாயங்கள் மற்றும் ‘ஈயம்’ (Lead) போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளன. சூடான உணவைச் செய்தித்தாளின் மீது வைக்கும்போது, இந்த மை உருகி உணவோடு கலந்துவிடக்கூடிய பேராபத்து உள்ளது. இது மனித உடலுக்குத் தீவிர உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.என எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) அறிவுறுத்தியுள்ளது. 

எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனையாளர்களும் இது சட்டப்படி குற்றம் என்பதை உணர்ந்து, உடனடியாக இச்செயலை நிறுத்த வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!