செல்போன் திருடன் கைகளை பிடித்துக் கொண்ட பயணிகள்: ரெயிலில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ
திருடன் கைகளை பிடித்துக் கொண்டதால் இழுத்துச் செல்லப்படடார்.
செல்போன் திருடன் என்ற சந்தேகத்தில் பயணிகள் வாலிபர் ஒருவரின் கைகளை பிடித்துக் கொண்டதால், ரெயிலில் தொடங்கியபடி இழத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருடன் கைகளை பிடித்துக் கொண்ட பயணிகள்
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் ஷிவ்நாராயன்பூர் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நின்று கொண்டிருந்தது.
பயணிகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர்.
அப்போது ஒரு கோச்சில் ஜன்னல் ஓரத்தில் இருந்த பயணி செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
ரெயில் புறப்படும் நேரத்தில் வாலிபர் ஒருவர் செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார். நொடிபொழுதில் சுதாரித்த அந்த பயணி வாலிபரின் கையை பிடித்துக் கொண்டார்.
அவருடன் சக பயணிகள் சேர்ந்து இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டனர்.
இதனால் பயணிகளிடம் இருந்து அந்த வாலிபரால் தப்பிய முடியவில்லை.
அதேநேரத்தில் ரெயில் புறப்பட்டுவிட்டது. ரெயில் வேகம் எடுக்க அவரால் பிளாட்பாரத்தில் காலை ஊன்றி ஓட முடியவில்லை. ரெயில் தொங்கியபடியும், பிளாட்பாரத்தில் இழுத்தபடியும் வாலிபர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பயணிகளால் பிடிக்கப்பட்டிருந்தார்.
அதிர்ச்சி வீடியோ
இதற்கு மேலும் அவரை பிடித்துக் கொண்டால் பிளாட்பாரத்திற்கு வெளியில் ரெயில் வேகமாக செல்லும்போது கீழே விழுந்த உயிரிழப்பது நிச்சயம் என நினைத்த பயணிகள், அவரது கைகளை விடுவித்தனர். இதனால் பிளாட்பாரத்தில் விழுந்தார். நல்லவேளையாக ரெயில் தண்டவாளத்திற்குள் இழுத்துச் செல்லவில்லை. பிளாட்பாரத்தில் விழுந்தார்.
Content from blocked embed
Shocking: At Shivnarayanpur Railway Station, a thief tried to snatch a mobile phone from a moving train and run away, but he was caught and held through the window https://t.co/Eii1vALd4u— Ramesh Speaks (@rameshofficial0)
October 12, 2026
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!