news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரம் ; உயர்நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்புகள் வெளிப்படுத்தும் செய்தி

08 Nov, 2026

இலங்கை அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையானது,  நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு  வழங்கும் அல்லது தண்டனையைக் குறைக்கும் நிறைவேற்று அதிகாரத்தை நாட்டின் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அரசுச் செய்திகள்

எனினும் கடந்த தசாப்தங்களில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகளால் வழங்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்புகள், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களையும் சட்ட விவாதங்களையும் தோற்றுவித்துள்ளன.

அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரை, கட்டாயமான கலந்தாய்வு நடைமுறைகளை விசாரணை நீதிபதி,சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சரின் பரிந்துரைகளைப் பெறுதல் விதிக்கின்ற போதிலும், அண்மைக்கால வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் இந்த அதிகாரமானது தன்னிச்சையாகப் பயன்படுத்தப்பட்டது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு அதிகாரம் மீதான விமர்சனங்கள்அரசு சேவைகள்

சட்ட நிபுணர்கள் , சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரம் தொடர்பாக அண்மைக்காலமாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொதுமன்னிப்பானது குற்றவாளியின் மனமாற்றம் அல்லது நீதியின் நியாயமான தேவை என்பவற்றைக் கடந்து அரசியல் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் ரீதியாக நெருக்கமானவர்களைப் பாதுகாக்கும் ஒரு 'அரசியல் சலுகையாக' மாற்றப்பட்டுள்ளது என்ற விமர்சனம் நிலவுகிறது.

நீதித்துறை சுயாதீனத்திற்கு பாதகம் விளைவித்தல்

நீண்டகால விசாரணைகளின் பின்னர், மேல் நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை மேன்முறையீடுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மரண தண்டனை அல்லது கடூழிய  தண்டனைகளை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரேயொரு கையெழுத்தின் மூலம் இல்லாதொழிப்பது, நீதித்துறையின் கௌரவத்தையும் அதன் தீர்ப்புகளின் வலிமையையும் பலவீனப்படுத்துகிறது.

கொலை மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், அவர்களது போராட்டங்களுக்கும் எவ்வித மதிப்பும் அளிக்கப்படாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவது, அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற சமத்துவக் கோட்பாட்டையும் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளையும் முழுமையாக மீறுவதாக அமைகிறது.

தண்டனைகளிலிருந்து விலக்குப்பெறும் கலாசாரம்

அரச அதிகாரிகள், இராணுவத்தினர் அல்லது அரசியல்வாதிகள் புரிந்த பாரதூரமான குற்றங்களுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கப்படும் போது, அது நாட்டில் 'தண்டனைகளிலிருந்து விலக்குப்பெறும் கலாசாரத்தை' மேலும் ஊக்குவிக்கிறது என்ற சர்வதேச அளவிலான விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.


நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021 – 2026) உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் எவ்வாறு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளன.அரசுச் செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு முரணாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு பொதுமன்னிப்பு வழங்கினார். இந்த பொதுமன்னிப்பை சவாலுக்குட்படுத்தி பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தனர்.


2024.01.17 ஆம் திகதியன்று நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேன (தற்போதைய பிரதம நீதியரசர்) தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவித்து, குறித்த பொதுமன்னிப்பை இரத்துச் செய்து, மரண தண்டனை தீர்ப்பை மீள அமுல்படுத்த உத்தரவிட்டது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கும்போது பின்பற்ற வேண்டிய அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையிலுள்ள சட்ட நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

கொழும்பு ரோயல் பார்க் வீடமைப்புத் தொகுதியில் 19 வயது பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அந்தோனி ஜெயமஹா என்பவருக்கு 2019 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கினார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தனர். நீண்ட விசாரணையின் பின்னர், மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், 2024 ஜூன் மாதக்காலப்பகுதியில்  இந்த பொதுமன்னிப்பு அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் கீழ் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகத் தீர்ப்பளித்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு. 2019 ஆம் ஆண்டு அப்போதைய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கினார்.அரசுச் செய்திகள்

இந்த பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம்இ அந்தப் பொதுமன்னிப்பு சட்டபூர்வமான நடைமுறைகளுக்கு அமைய வழங்கப்படவில்லை 2026.09.10 ஆம் திகதி  தீர்ப்பளித்தது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இரத்துச் செய்த உயர்நீதிமன்றம் ஞானசார தேரர் எஞ்சிய தண்டனைக் காலத்தைச் சிறையில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தனது மனைவிகளுக்கு 1.74 மில்லியன் ரூபாய் ஜீவனாம்ச நிலுவைத் தொகையை வழங்கத் தவறியதால் நீதவான் நீதிமன்றத்தால் 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபருக்குஇ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டு  சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தனர். நீண்ட விசாரணையின் பின்னர் நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு சிவில் மற்றும் நிதி சார்ந்த நீதிமன்றக் கடமைகளில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தன்னிச்சையாகத் தலையிட முடியாது என சுட்டிக்காட்டியது.

இரண்டு மாதங்களுக்கும் குறைவாக சிறையிலிருந்த நபரை விடுவித்தது அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையை மீறும் செயலாகும் என அறிவித்து குறித்த மன்னிப்பை இரத்து செய்தது.

இலங்கை அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின்  கீழ். நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும்போது பின்பற்ற வேண்டிய கட்டாயச் சட்ட நடைமுறைகள் அரசியலமைப்பிலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.அரசுச் செய்திகள்


ஜனாதிபதியின் இந்த நிறைவேற்று அதிகாரம்  தன்னிச்சையாகவோ அல்லது அரசியல் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ பயன்படுத்தப்படக் கூடாது என்பதால் அரசியலமைப்பு  படிமுறைகளையும் கலந்தாய்வு நடைமுறைகளையும்  நிபந்தனையாகக் விதித்துள்ளது.

மரண தண்டனை அல்லது கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்க பரிசீலிக்கும்போது, குறித்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் ஜனாதிபதி முதலில் அறிக்கை ஒன்றைக் கோர வேண்டும்.

நீதிபதி வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றத்தின் பாரதூரம் மற்றும் தண்டனையின் பின்னணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிவான அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

குறித்த வழக்கை விசாரணை நீதிபதியின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அது சட்டமா அதிபருக்கு  அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

சட்டமா அதிபர் அந்த அறிக்கையையும்இசட்ட ஆவணங்களையும் ஆராய்ந்து, குறித்த குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது சட்டப்பூர்வமாகச் சரியானதா என்பது குறித்த தனது சட்ட ஆலோசனையை வழங்க வேண்டும்.அரசுச் செய்திகள்

நீதிபதியின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் அடங்கிய கோப்பு நீதி அமைச்சருக்கு அனுப்பப்படும்.

நீதி அமைச்சர் அந்த ஆவணங்கள் அனைத்தையும் முழுமையாக பரிசீலித்து மன்னிப்பு வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து தனது இறுதிப் பரிந்துரையை ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

நீதிபதி, சட்டமா அதிபர், நீதி அமைச்சர் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்ற பின்னரே ஜனாதிபதி தனது முடிவை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அளிக்கும் நடைமுறை சட்டப்படியான வழிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் அதனை முழுமையாக பரிசீலித்து இரத்துச் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்தக்கு உண்டு

உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புகளையும் தற்போதைய விமர்சனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரத்தில் ஜனாதிபதி தன்னிச்சையாக முடிவெடுப்பதைத் தடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் மனித உரிமைப் பிரதிநிதிகள் அடங்கிய சுயாதீனக் குழுவின் பரிசீலனைக்குப் பின்னரே மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.


பொதுமன்னிப்புக்கான காரணங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்  பொதுமன்னிப்பு வழங்கும் நடைமுறையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாட்டைக் கேட்டறிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் ஆகிய சீர்த்திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்ற யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டு செயற்பட போவதில்லை நீதிமன்றத்தால், வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தன்னிடம் நிவாரணத்தை எவரும் எதிர்பார்க்க கூடாது. ஏதேனும் குற்றத்துக்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை நீதிமன்ற கட்டமைப்புக்குள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அரசுச் செய்திகள்

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அதிகாரத்தை இரத்துச் செய்ய வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. நீதிமன்றத்தால் சட்ட ரீதியில் வழங்கப்பட்ட தீர்ப்பினை தனிநபரான ஜனாதிபதி மீள்பரீசீலனை செய்வது சட்டத்தையும்இ நீதிமன்ற தீர்ப்பையும் கேள்விக்குள்ளாக்கும். அது சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை மீறுவதாக அமையும்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரம் என்பது கருணையின் வெளிப்பாடாகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, சட்டத்தின் ஆட்சியை  சவாலுக்கு உட்படுத்தும் கருவியாக இருக்க முடியாது. இலங்கை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள் நிறைவேற்று அதிகாரம் அரசியலமைப்புக்கும் நீதிமன்ற மீளாய்வுக்கும்  உட்பட்டது என்பதை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!