news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

22 Oct, 2026

வீரமணி மகளின் நெருங்கிய நட்பு வட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகர் பிரகாஷ் இருந்துள்ளார். இவருக்கு, வீரமணியின் குற்றங்கள் குறித்து நன்கு தெரியும். வீரமணி மீது சட்ட நடவடிக்கை பாயாமல் இருக்க, பிரகாஷ் இடைத்தரகர் போல செயல்பட்டிருக்கிறார்.


சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் அதிபர் வீரமணி கைதாகி சிறையில் இருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் உள்ளிட்டோரும் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீரமணி உள்ளிட்டோர் மீதான குற்றங்கள் குறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வீரமணியின் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகரான பிரகாஷ் என்பவருக்கு, வீரமணி, 100 கோடி ரூபாய் அனுப்பி இருப்பது தெரியவந்திருக்கிறது.



வீரமணியின் நெருங்கிய நட்பு வட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகர் பிரகாஷ் இருந்துள்ளார். இவருக்கு, வீரமணியின் குற்றங்கள் குறித்து தெரிந்திருக்கக்கூடும் என்கிறார்கள். மேலும், வீரமணி மீது சட்ட நடவடிக்கை பாயாமல் இருக்க, பிரகாஷ் இடைத்தரகர் போல செயல்பட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வீரமணி, சிறுமியருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைக் காட்டி, அவரது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை, தன் குடும்பத்தினருக்கு தர வேண்டும் என சாந்தி மிரட்டி உள்ளார். இது பற்றி பிரகாஷிடம், வீரமணி மகள் தெரிவித்துள்ளார்.


பிரச்னை எல்லை மீறியதால் வீரமணி சென்னை மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள இரண்டு சொத்துக்களை விற்று, பிரகாஷுக்கு, 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதில், 24 கோடி ரூபாயை தன் வங்கிக் கணக்கில் பிரகாஷ் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

பிரகாஷ் தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கிறார். அவரைப் பிடிக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் தலைமறைவாக உள்ள பிரகாஷைக் கைதுசெய்ய, சென்னை காவல்துறை 'புளூ கார்னர் நோட்டீஸ்' வெளியிட உள்ளது. அவர் யுனைடெட் கிங்டமில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறை வட்டார தகவல்களின்படி, விசாரணையாளர்கள் இன்டர்போல் மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!