தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயுடன் இணைந்து திரிஷா பேரவை அரசியலில் செயல்பட உள்ளது. இந்த அமைப்பின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான லோகோ வெளியீட்டு விழா நெல்மை பத்திரிகையளர் மன்றத்தில் இன்று நடைபெறரது. அமைப்பின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால், அமைப்பின் இலட்சனையை வெளியிட்டதோடு, அமைப்பின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமையாக மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா இருந்தார்.

நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'!
ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார் என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும். அதனால் அவர் அரசியலில் பயணித்தால், தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழித்தோன்றலாகவே நாங்கள் அவரைப் பார்க்கிறோம். அதன் காரணமாகவே, 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' தொடங்கியுள்ளோம்.
Tired of Ads? Subscribe Now
இந்த அமைப்பின் மூலம் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் அவை அடித்தட்டு மக்களை சென்று சேர்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன அதை களையும் நடவடிக்கையில் எங்கள் அமைப்பு ஈடுபடும்.

நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'!
பல்வேறு அமைப்புகள் மருத்துவ முகாம், சட்ட உதவி முகாம், மரம் நடுதல் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்றவற்றை செய்து வந்தாலும் தங்களது அமைப்பு நேரடியாக களமிறங்கி மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும். சாதாரண மக்களுக்கு சட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் சட்ட குழுவை அமைத்துள்ளோம்.
ஏழை எளிய மக்களின் நோயை தீர்க்கும் வகையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ உதவி அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
அரசு அலுவலகங்களில் மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைக்க உதவிகள் செய்வோம். சமூகப் பணிகளுக்காகவே தொடங்கப்பட்டுள்ள திரிஷா பேரவை சார்பாக தனியாக வலைத்தளம் தொடங்கப்படும்.
பொதுமக்கள் தங்களின் குறைகளை அந்த வலைத்தளத்தில் தெரியப்படுத்தினால் உரிய உதவிகள் செய்து கொடுக்கப்படும். ஏழை எளிய மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது திரிஷா பேரவையின் தலையாய கடமை" என்று தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!