news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜேர்மனியில் விமானத்தின் முன்சக்கரம் உடைந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

05 Jun, 2026

ஜேர்மனியின் பிராங்க்போர்ட் சர்வதேச விமான நிலையத்தில் லுப்தான்சா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தின் முன்சக்கரம் திடீரென உடைந்து விழுந்த சம்பவத்தில் பல பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.


அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகருக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த விமானம், விமான நிலைய நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 


அப்போது விமானத்தில் விமானப் பணியாளர்கள் மற்றும் தரைப் பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். பயணிகள் விமானத்தில் ஏறாத நிலையில் இருந்ததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முன்சக்கரம் திடீரென சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி சேதமடைந்தது. சம்பவத்தையடுத்து அவசர மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்த பணியாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்


இந்த விமானம் லுப்தான்சா நிறுவனத்தின் புதிய போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்களில் ஒன்றாகும். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஜேர்மன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் லுஃப்தான்சா நிறுவனம் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.


சம்பவத்தையடுத்து லொஸ் ஏஞ்சலஸுக்குச் செல்லவிருந்த LH450 விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!