news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஞான­சார தேரர் விவ­கா­ரமும் அர­சியல் ஆபத்­துக்­களும்

20 Oct, 2026
சகல சமூ­கங்­க­ளையும் சமத்­து­வ­மாக நடத்­து­வதே தங்­க­ளது கொள்கை என்றும் மீண்டும் இன­வா­தமும் மதத்­தீ­வி­ர­வா­தமும் தலை­தூக்க ஒரு­போதும் அனு­ம­திக்கப் போவ­தில்லை என்றும் ஜனா­தி­பதி அநுர குமார திசாநா­யக்­கவும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் ஏனைய தலை­வர்­களும் இடை­ய­றாது செய்து வந்­தி­ருக்கும் பிர­க­டனம்  தற்­போது பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் சம்­பந்­தப்­பட்ட சர்ச்­சையின் வடிவில் உண்­மை­யான சோத­னையைச் சந்­தித்­தி­ருக்­கி­றது.

தென்­னி­லங்கை அர­சி­யலில் ஞான­சார விவ­காரம் என்­பது வெறு­மனே ஒரு தனிப்­பட்ட  பௌத்த பிக்கு சார்ந்த சட்ட நட­வ­டிக்கை என்­றில்­லாமல், இலங்­கையின் ஜன­நா­யக எதிர்­கா­லத்­தையும் சட்­டத்தின் ஆட்­சி­யையும் தீர்­மா­னிக்கும் ஒரு முக்­கி­ய­மான சோதனைக் கள­மாக மாறி­யி­ருக்­கி­றது.

இது­கா­ல­வ­ரையில் நடை­மு­றையில் இருந்து வந்­தி­ருக்கும் இலங்கைச்  சிறைச்­சாலை திணைக்­க­ளத்தின் விதி­மு­றை­களின் பிர­காரம் ஞான­சா­ரவின் காவி­யுடை களை­யப்­பட்டு, சாதா­ரண உடையில் அவர் சிறைச்­சாலையில் இருந்து நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட சம்­ப­வத்­தை­ய­டுத்தே  சர்ச்சை மூண்­டது.




ஒரு பிக்­குவின் காவி உடையை அல்­லது  பிக்கு நிலையை நீக்கும் அதி­காரம் சுய­வி­ருப்­பத்தின் பேரில் அந்த பிக்­கு­விற்கு அல்­லது பௌத்த ஒழுக்க விதி­களின் பிர­காரம் பௌத்த உயர்­பீ­டங்­களின் தலை­வர்­க­ளான  மகா­நா­யக்க தேரர்கள் அடங்­கிய சங்க சபைக்கு மாத்­தி­ரமே இருக்­கி­றது என்று  கூறப்­ப­டு­கி­றது.


சிறைச்­சாலை அதி­கா­ரிகள் ஞான­சா­ரவின் காவி­யு­டையை அகற்­றி­யதன் மூலம் பௌத்த சாச­னத்தை  அவ­ம­தித்­து­விட்­டனர் என்று குற்­றஞ்­சாட்­டிய மகா­சங்­கத்­தினர் அவர் சிறை­யி­லி­ருந்து  வெளியில்  நீதி­மன்­றத்­துக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­ற­போது காவி­யு­டையை  அணிந்­தி­ருப்­ப­தற்கு அனு­ம­திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தனர்.


ஞான­சார தேரர் நடத்­தப்­பட்ட முறையை ஆட்­சே­பித்து நான்கு பௌத்த உயர் பீடங்­க­ளி­னதும் மகா­நா­யக்க தேரர்கள்  கூட்­டாக சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கத்­துக்கு கடிதம் எழு­தி­யதைத் தொடர்ந்து மூன்று நிக்­கா­யாக்­களைச் சேர்ந்த மூத்த மத­கு­ரு­மாரை, பௌத்த சாசன மற்றும் நீதி­ய­மைச்­சர்கள்  சகிதம் ஜனா­தி­பதி திசாநா­யக்க தனது செய­ல­கத்தில் அக்­டோபர் 8 ஆம் திகதி சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை  நடத்­தினர்.

தனி­நபர் ஒரு­வ­ருக்­கா­கவோ அல்­லது அமைப்பு ஒன்றின் அழுத்­தத்­துக்­கா­கவோ சட்­டத்­துக்குப் புறம்­பாக உத்­த­ரவைப் பிறப்­பிக்கப் போவ­தில்லை என்றும் தனது தனிப்­பட்ட விருப்­பங்கள் நாட்டின் சட்­ட­மாக முடி­யாது என்றும் அந்த சந்­திப்பில் திச­ாநா­யக்க உறு­தி­யாகக்  கூறினார்.

 அனை­வ­ருக்கும் சம­மா­ன­தாக இருக்கும் சட்­டத்தை மீறும் அதி­காரம் நிறை­வேற்று அதி­கார  ஜனா­தி­ப­திக்கும் கூட  இல்லை என்று மகா­சங்கத் தூதுக்­கு­ழு­வுக்கு முன்னால் நின்று  திச­ாநா­யக்க செய்த பிர­க­டனம் பர­வ­லாக பாராட்­டப்­பட்ட  அதே­வேளை, பிக்­குகள் தொடர்பில் நடை­மு­றையில் உள்ள சிறைச்­சாலைச் சட்­டங்­க­ளையும் ஒழுங்­கு ­வி­தி­க­ளையும் மறு­ப­ரி­சீ­லனை செய்­வ­தற்கு இரு வாரங்­களில் குழு ஒன்று நிய­மிக்­கப்­படும் என்று செய்த அறி­விப்பு அவர் மகா­சங்­கத்தின் அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணிந்­து­விட்டார் என்ற விமர்­ச­னத்­தையும் மறு­பு­றத்தில் கிளப்­பி­யது.

இந்த இரண்டு பார்­வை­க­ளையும் காலங்­கா­ல­மாக இலங்­கையின் அரச தலை­வர்கள் மகா­சங்­கத்­தி­னரின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு  அடி­ப­ணிந்து செயற்­பட்ட வர­லாற்றின் பின்­பு­லத்தில் வைத்து நடு­நி­லை­யோடு ஆராய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தற்­போது நடை­மு­றையில் உள்ள சட்­டத்தை மீறித் தன்­னிச்­சை­யாக ஒரு உத்­த­ரவை ஜனா­தி­பதி பிறப்­பித்­தி­ருந்தார் என்றால் அதை "அப்­பட்­ட­மான அடி­ப­ணிதல்" என்று கூற­மு­டியும். அதைத் தவிர்த்து கால­னித்­துவ காலப் பழ­மை­வாய்ந்த  சிறைச்­சாலைக் கட்­டளைச் சட்­டத்தை காலத்தின் தேவைக்கு ஏற்­பவும் பெளத்த சாசன மர­பு­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யிலும் சட்ட ரீதி­யாகத் திருத்­து­வ­தற்கு முற்­ப­டு­வதை அடி­ப­ணி­த­லாகப் பார்ப்­பது சரி­யான அணு­கு­மு­றை­யல்ல .  

மகா­சங்கத் தூது­கு­ழு­விடம் ஜனா­தி­பதி திசாநா­யக்க கூறிய வார்த்­தை­களை அர­சியல் அல்­லது மதச் செல்­வாக்கு மூல­மாக சட்­டத்தை வளைக்கும் நீண்­ட­காலக்  கலா­சா­ரத்தை  மாற்­றி­ய­மைக்கும் நோக்­கி­லான  துணிச்­ச­லான ஒரு முதல்  நகர்­வாக ஏன் பார்க்­கக்­கூ­டாது? 

புதிய திருத்­தங்­களும்  ஒழுங்கு விதி­களும்  எந்­த­வொரு குறிப்­பிட்ட பிக்­கு­வையும் இலக்­காகக் கொண்­ட­தா­கவோ அல்­லது சலுகை அளிக்கும் வகை­யி­லா­ன­தா­கவோ  அமை­யக்­கூ­டாது என்றும் இது ஒட்­டு­மொத்த சிறைச்­சாலை  முறை­மைக்கும் பொது­வா­ன­தாக உரு­வாக்­கப்­படும் என்றும் அவர் கூறி­யது தனி­நபர் அர­சியல் இலா­பங்­க­ளுக்­கான சலு­கை­களை நிரா­க­ரிக்கும் ஒரு வர­வேற்­கத்­தக்க நிலைப்­பா­டாகும்.

நீதி­ய­மைச்சர் ஹர்­ஷன நாண­யக்­கா­ர


இரு வாரங்­களில் குழு­வொன்று அமைக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி அறி­வித்­தி­ருந்த நிலையில், சிறைச்­சா­லை­களை நிரு­வ­கிக்கும் சட்­டங்­க­ளையும் ஒழுங்கு விதி­க­ளையும் மீளாய்வு செய்ய நிய­மிக்­கப்­பட்ட குழு­வொன்று அதன் இடைக்­கால அறிக்­கையை ஒரு வாரத்­துக்­குள்­ளா­கவே (ஒக்­டோபர் 14) ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரிடம் கைய­ளித்­தது. அதைத் தொடர்ந்து சிறைச்­சா­லைக்கு வெளியே பிக்­குமார் கூட்­டிச்­செல்­லப்­ப­டும்­போது காவி­யு­டையை அணி­வ­தற்­கான அவர்­களின் உரிமை உட்­பட சிறைக் கைதி­க­ளான  பிக்­குமார் நடத்­தப்­பட வேண்­டிய முறை தொடர்­பான  ஒழுங்கு விதி­களை மாற்­று­வது குறித்து  அர­சாங்கம் பரி­சீ­லனை செய்­கி­றது என்று நீதி­ய­மைச்சர் ஹர்­ஷன நாண­யக்­கா­ர­வி­ட­மி­ருந்து அறி­விப்பு வந்­தது.

இது ஜனா­தி­பதி திச­ாநா­யக்­கவும் அவ­ரது அர­சாங்­கமும் இந்த விவ­கா­ரத்தில் எந்­த­ள­வுக்கு நெருக்­கு­த­லுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது என்­பதை வெளிக்­காட்­டு­கி­றது. மகா­சங்­கத்தை பகைத்­துக்­கொள்ளும் வகை­யி­லான அணு­கு­மு­றை­களைக் கடைப்­பி­டிக்க வேண்டாம் என்று ஜனா­தி­ப­திக்கு அவ­ரது தலை­மை­யி­லான மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்குள் (ஜே.வி.பி.) உள்ள  பிரி­வு­க­ளி­ட­மி­ருந்து கூட நெருக்­குதல் வந்­தி­ருக்­கக்­கூ­டிய சாத்­தி­யத்தை நிரா­க­ரிப்­ப­தற்­கில்லை.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற சந்­திப்பில் திச­ாநா­யக்க 'சட்­டத்தின் முன் சக­லரும் சமம் ' என்ற கோட்­பாடு குறித்து  அளித்த விளக்கம் மகா­சங்­கத்­தி­னரை  ஆத்­தி­ர­ம­டைய வைத்­தி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.


அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் அதி­மு­தன்மை அந்­தஸ்­தையும்  பௌத்த சாச­னத்தை போற்றிப் பாது­காப்­பது இலங்கை அரசின் கடமை என்று கூறப்­பட்­டி­ருப்­ப­தையும், தாங்கள் சட்­டத்­துக்கு அப்­பாற்­பட்­ட­வர்கள் என்றும் தாங்கள் சொல்­வ­தையே அர­சாங்­கங்கள் செய்ய வேண்டும் என்றும் பிக்­கு­மாரில் பெரும்­பா­லா­ன­வர்கள் விளங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றார்­களோ 

 என்று சந்­தே­கிக்க வேண்­டிய அள­வுக்கு அவர்­களின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன. தங்­க­ளது மதம் குறிப்­பிட்ட ஒரு சமூ­கத்­துடன் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய ஒன்று அல்ல என்­பதை எத்­தனை பிக்­குமார் அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்­களோ தெரி­ய­வில்லை.

சாந்­தமே உரு­வான புத்­த­பி­ரானின் போத­னை­களைப் பின்­பற்­று­வ­துடன் மக்­க­ளுக்கும் போதிப்­பதை கட­மை­யாகக் கொண்ட பிக்­குமார் வன்­முறைக் கும்­பல்­களைச் சேர்ந்­த­வர்­களைப் போன்று பொது­வெ­ளியில் அட்­ட­கா­ச­மாக  நடந்து கொள்­கி­றார்கள். கடந்­த­வாரம் கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்னால் இடம்­பெற்ற போராட்­டத்­தின்­போதும் அவர்­களின் அத்­த­கைய நடத்­தை­களைக் காணக் கூடி­ய­தாக இருந்­தது.

 ஞான­சா­ரவின் காவி உடையைக் களைந்து  சாதா­ரண உடையில் அவரை நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­வந்த சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் செய­லுக்கு எதி­ராக தொடங்­கிய போராட்டம் இறு­தியில் அவரின் உட­னடி  விடு­த­லையைக் கோரும் இயக்­க­மாக மாறி­யி­ருக்­கி­றது. ஒக்­டோபர் 10 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளி­கைக்கு அருகில் இருந்து கொழும்பை நோக்கி பிக்­கு­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட " காவி உடைக்­கான நீதி / சுதந்­திரப் பாத­யாத்­திரை" ஆறா­வது நாள் ஜனா­தி­பதி செய­ல­கத்தை வந்­த­டைந்­தது.

ஞான­சார விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்தை அடி­ப­ணி­ய­வைக்க வேண்டும் என்­பதே அந்த பிக்­கு­மாரின் குறிக்­கோ­ளாக இருந்­தது. ஞான­சா­ர­வுக்கு மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­வது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பத்து நிமி­டங்­களில் பதில்  வர­வேண்டும் என்று கூட சில பிக்­குமார்  ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருக்கு கால அவ­காசம் வழங்­கி­ய­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனால், அர­சாங்கம் அவர்­களின் கோரிக்­கைக்கு விட்டுக் கொடுக்­காமல் சட்­டத்தின் பிர­கா­ரமே நட­வ­டிக்கை எடுக்க முடியும் என்ற உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருந்­தது. ஜனா­தி­பதி செய­ல­கத்தின் முன்­பாக மூன்று நாள் முற்­று­கையின் இறு­தியில் நீதி­மன்றத் தடை­யுத்­த­ரவை  பிக்­கு­மாரும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­களும் கூடா­ரங்­களை அகற்­றிக்­கொண்டு  கடந்த வெள்­ளி­யன்று கலைந்து செல்ல வேண்­டி­ய­தா­யிற்று.

ஞான­சா­ர­ தேரருக்கு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய பொது­மன்­னிப்பு நீதி­மன்­றத்­தினால் இரத்துச் செய்­யப்­பட்­டதன் பின்­னரே அவர் மீண்டும் கைது செய்­யப்­பட்டார் என்­பதால், இதில் சட்­ட­ரீ­தி­யான நடை­மு­றை­களே பின்­பற்­றப்­படும் என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக இருக்­கி­றது. சட்­டத்­துக்கு புறம்­பாக தன்னால் செயற்­பட முடி­யாது என்று ஜனா­தி­பதி திச­ாநா­யக்க மீண்டும் கூறிய அதே­வேளை, ஞான­சார விவ­கா­ரத்தை நீதி­மன்­றமே கையாள முடியும் என்று பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஞான­சா­ரவை விடு­தலை செய்யும் தீர்­மா­னத்தை ஜனா­தி­ப­தியோ அல்­லது அர­சாங்­கமோ எடுக்­கப்­போ­வ­தில்லை என்று அமைச்சர் லால் காந்த கூறினார். அர­சியல் அதி­காரம் அல்­லது சமூக அந்­தஸ்தைப் பொருட்­ப­டுத்­தாமல் சட்டம் அனை­வ­ருக்கும் சம­ம­மான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்றும் எந்­த­வொரு தனி­ந­ப­ருக்கும் சலுகை வழங்­கு­வ­தற்­காக சட்­டத்தைத் திருத்­தவோ அல்­லது வளைத்துக் கொடுக்­கவோ அர­சாங்கம் தயா­ரில்லை என்று அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் நளிந்த ஜய­திஸ்ஸ கூறினார்.

அர­சாங்கம் அதன் நிலைப்­பாட்டை திட்­ட­வட்­ட­மாக தெளி­வு­ப­டுத்­தி­விட்ட நிலையில், பிக்­குமார் அடுத்து எத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் இறங்கப் போகி­றார்­களோ தெரி­ய­வில்லை. ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்னால் கூடா­ரங்­களை அமைத்து நடத்தும் முற்­றுகைப் போராட்­டங்கள் எல்­லாமே ' அரக­லய ' ஆகி­வி­டாது. போராட்­டங்­க­ளுக்­கான கார­ணங்­களே அவற்­றுக்­கான மக்­களின் ஆத­ரவைத் தீர்­மா­னிக்­கின்­றன.

இது இவ்­வா­றி­ருக்க, தென்­னி­லங்கையின் எதி­ரணிக் கட்­சிகள் தேசிய மக்கள் சக்­திக்கு எதி­ரான அணி­தி­ரட்­டல்­க­ளுக்கு பிர­தா­ன­மாக இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தை­யுமே நம்­பி­யி­ருக்­கின்­றன என்­ப­தையும் ஞான­சார  தேரர் விவ­காரம் அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மதத்­த­லை­வர்கள் சிவில் சட்­டங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­வர்­களா என்ற கேள்­விக்கு உலகின் எந்­த­வொரு ஜன­நா­யக நடை­மு­றை­யிலும் "இல்லை " என்­பதே பதி­லாகும்.' சட்­டத்தின் முன் அனை­வரும் சமம்' என்ற அடிப்­படை அர­சி­ய­ல­மைப்பு உரி­மை­யா­னது சாமி­யா­ருக்கும் சாமா­னி­ய­னுக்கும் பொது­வா­னது.

தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள் ஞான­சார தேரர் விவ­கா­ரத்தை குறு­கிய அர­சியல் இலா­பங்­க­ளுக்­கான ஆயு­த­மாக மாற்­று­வதில் அக்­கறை காட்­டி­னார்கள். இலங்கை வர­லாற்றில் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்­டி­விட்டு அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வது அர­சி­யல்­வா­தி­களின் பழ­கிப்­போன உத்­தி­யாகும். இன­வா­தத்தின் விளைச்­ச­லையே  மூன்று தசாப்­த­கால கொடூ­ர­மான  உள்­நாட்டுப் போராக நாடு அறு­வடை செய்­தது.

அதே­போன்­ற­தொரு ஆபத்­தான விளை­யாட்டைத் தான் தென்­னி­லங்கை எதிர்க்­கட்­சி­களும் தீவி­ர­வாத அமைப்­புக்­களும் இன்று மீண்டும் கையில் எடுத்­தி­ருக்­கின்­றன. ஊழ­லுக்கும் முறை­கே­டு­க­ளுக்கும் எதி­ரான சட்ட நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்து, கடந்­த­கால  அர­சியல் புள்­ளிகள் பலரின் முகத்­திரை கிழியத் தொடக்­கி­யுள்ள நிலையில், தம்மைத் தற்­காத்துக் கொள்­ளவும் மக்கள் செல்­வாக்கை மீண்டும் பெறவும் அவர்கள் மத உணர்­வு­களை ஒரு கேட­ய­மாகப் பயன்­ப­டுத்­து­கி­றார்கள்.

தண்­டனை பெற்ற ஒரு மத­கு­ருவின் உடையை மைய­மாகக் கொண்டு "மதம் ஆபத்தில் இருக்­கி­றது" என்ற போலிப் பிம்­பத்தை உரு­வாக்கி, மக்கள் மத்­தியில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­பது நாட்டின் அமை­திக்குப் பேர­பா­யத்தை விளை­விக்கும். இலங்கைச் சமூகம் கடந்த கால கசப்­பான அனு­ப­வங்­களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்­களை மறந்­து­விடக் கூடாது. மதத்­தி­னதும் தேசி­ய­வா­தத்­தி­னதும் பெயரால் வீதி­களில் இறங்கிப் போராட அழைக்கும் அர­சி­யல்­வா­தி­களின் பின்­ன­ணியில் உள்ள சுய­நல அர­சி­யலை மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

நீதியை நிலை­நாட்­டு­வதும் சட்­டத்தின் ஆட்­சியைப் பலப்­ப­டுத்­து­வதும் நாக­ரிக சமூ­க­மொன்றின் அடையாளமாகும். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மீண்டும் இனவாத, மதவாதத் தீயை மூட்டத்துடிக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் மக்கள் நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்ட விமர்சனங்களைக் கடந்து, சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை  ஆதரிப்பதே நாட்டின் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.

இலங்கை அரசியலில் மகாசங்கத்தின் செல்வாக்கின் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து கவலைப்படுபவர்கள் ஞானசார விவகாரம் தோற்றுவித்த சர்ச்சையில் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிலைப்பாட்டுக்கே தங்களது ஒருமைப்பாட்டை  நிச்சயமாக வெளிக்காட்ட  வேண்டும். 

ஆனால், இந்த விவகாரத்தில் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கப் பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் ஜனாதிபதியும் அரசாங்கமும் சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்கின்ற எண்ணற்ற பிரச்சினைகளிலும் இதே போன்ற உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அரசியல் துணிவாற்றலை வரவழைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதை அவர்கள்  செய்வார்களா?

இறுதியாக, ஞானசார தேரர், புத்தரின் போதனைகளுக்கு எதிராக சமூகங்களுக்கு இடையில் மோதல்களைத் தூண்டிவிடும் வகையில் முன்னெடுத்த செயற்பாடுகளை  காவி உடைக்கும்  தங்களது மதத்துக்கும்  அவமதிப்பாக கருதத் தவறிய  மகாசங்கத்தினர், அவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைக் கைதியாக இருக்கும் போது காவி உடையுடன்  இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது அவர்கள்  மத்தியிலான ஒழுக்க நியாயப் பாரம்பரியம் பற்றி முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!