news@ilakkiyainfo.com

பிரிவுகள்

டிரம்ப் மருமகன் கணக்கிற்கு ரகசியமாக மாற்றப்பட்ட ரூ.35,000 கோடி: டச்சு உளவாளி அமைப்பு

23 Oct, 2026


 ":"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர், சவுதி அரேபியாவிடம் இருந்து சுமார் 35,000 கோடி ரூபாயை ரகசியமாக தனது வங்கி கணக்கிற்கு பணப்பறிமாற்றம் செய்துள்ளதாக டச்சு உளவாளி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

.டிரம்ப் மருமகன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப்பை 45 வயதான ஜாரெட் குஷ்னர் என்பவர் திருமணம் செய்துள்ளார். இவர் அமெரிக்காவின் தற்காலிக சமாதான பேச்சுவார்த்தை தூதுவர்களில் ஒருவராக பணிபுரிந்து வருகிறார்.

குஷ்னரின் ஐபோனை ரகசியமாக உளவு பார்த்த டச்சு உளவாளி அமைப்பு, அஜர்பைஜானில் உள்ள ஒரு வங்கி கணக்கு மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பணப்பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. .

டச்சு உளவாளி அமைப்பு

மேத்யூ கோலின் என்பவர் எழுதியுள்ள ‘பிரின்சஸ் அண்ட் தீவ்ஸ்: ஜாரெட் குஷ்னர் மற்றும் முகமது பின் சயீதின் மத்திய கிழக்கை மறுவடிமைப்பதற்கான ரகசிய சதித்திட்டம்’ என்ற புத்தகத்தின் ஒரு பகுதியை டச்சு உளவாளி அமைப்பு மேற்கோள் காட்டியுள்ளது.

மேலும் இதுகுறித்து டச்சு உளவாளி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் தொண்டு நிறுவனமான வதானி அல் எமராத் அறக்கட்டளைக்கு சொந்தமான ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி கணக்கிற்கு கிட்டத்தட்ட சுமார் 7,000 கோடி ரூபாய் பணப்பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளது..

டிரம்பின் மருமகனான குஷ்னர் அந்த வங்கி கணக்கில் கையொப்பம் இடுபவராக இருந்ததால், அதை அணுகும் வசதி அவரிடம் மட்டுமே இருந்தது.

மேலும் அந்த வங்கி கணக்கு, ஐக்கிய அரபு அமீரக தலைவரான முகமது பின் சயீதின் சகோதரரான தஹ்னூன் பின் சயீத் என்பவரால் மேற்பார்வையிடப்பட்டு வருகிறது.

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கு உதவுவதற்காக ஒரு ரகசிய நிதியை அமைக்க விரும்பியதால், பின் சயீத் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர்களே இந்த வங்கி கணக்கின் யோசனைக்கு பின்னால் இருந்தனர்..

இந்த ரகசிய நிதி யோசனை ஒருகட்டத்தில் தோல்வி அடைந்தபோதிலும், குஷ்னருக்காக ரகசியமாக குறைந்தபட்சம் சுமார் 19,000 கோடி ரூபாயை சவுதி அரேபியா செலுத்தியுள்ளது.

இதேபோன்று மற்றொரு வங்கி கணக்கில் இருந்தும், குஷ்னருக்காக தனிப்பட்ட முறையில் 9,000 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதிஇந்த பணப்பறிமாற்றத்திற்கு ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஏற்பாடு செய்துள்ளார். 

மேலும் ரகசியமாக மாற்றப்பட்ட தொகையை தங்கள் நாட்டில் சேமித்து வைக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குஷ்னரை ஊக்குவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டச்சு உளவாளி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அதிபர் டிரம்பின் மருமகன் குஷ்னர் மறுப்பு தெரிவித்துள்ளார்..

குஷ்னர் மறுப்பு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அப்பட்டமான மற்றும் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நூலாசிரியரால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானவை.இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நூலாசிரியர் ஒரு சிறு ஆதாரத்தைக் கூட வழங்கத் தவறிவிட்டார். 

இந்த குற்றச்சாட்டுகளை ஆதரிக்க, வங்கி அறிக்கைகள், பணப் பரிமாற்றப் பதிவுகள், கணக்கு எண்கள், பரிவர்த்தனை தேதிகள் அல்லது சரிபார்க்கக்கூடிய பிற விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை..

கேள்விக்குட்பட்ட அந்த காலகட்டத்தில், நான் பல நாடாளுமன்ற விசாரணைகள் மற்றும் ஒரு சிறப்பு வழக்கறிஞர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.

இந்த விசாரணைகளுக்கு நான் தானாக முன்வந்து ஒத்துழைத்து, 30 மணி நேரத்திற்கும் மேலாக சாட்சியம் அளித்தேன்.

இந்த குற்றச்சாட்டுகளில் எதுவும் வெளிவரவில்லை. ஏனெனில் இந்த நிகழ்வுகள் எதுவும் ஒருபோதும் நடக்கவில்லை.இவை 

புலனாய்வு இதழியல் என்று கூறப்படும் அப்பட்டமான புனைவுகள். இது இதழியல் அல்ல. இது கற்பனை, புனைவு மற்றும் ஒருதலைபட்சமான பிரசாரம் ஆகியவற்றின் கலவையாகும்.

இதை எழுதியவர் ஒன்று மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் அல்லது தீய நோக்கத்துடன் செயல்படுபவராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.",


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!