தங்கொட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவில பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, தங்கொட்டுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தங்கொட்டுவை பொலிஸ் பிரிவின் கோணவில பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
உயிரிழந்தவர் தங்கொட்டுவை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.
உயிரிழந்த பெண்ணின் கழுத்துப் பகுதி கூர்மையான ஆயுதமொன்றினால் அறுக்கப்பட்டு இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்வதற்காகத் தங்கொட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!