news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

20 Nov, 2026
இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வியாழக்கிழமை (19.11.2026) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது; விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த 274 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கடற்படைக் கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படையின் ‘காஞ்சதேவ’ நிறுவனத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்; சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த குறித்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைத் தொகையுடன், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைத் தொகுதி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!