news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

05 Nov, 2026

தண்டவாளத்தில் சொகுசாக குடை பிடித்துக்கொண்டு படுத்திருந்த நபரைப் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார் 

"தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்பது" என்றாலே தற்கொலைக்கு முயலுவதாக நாம் எண்ணிக்கொள்கிறோம். தண்டவாளத்தில் இப்படி வசதியாகவும் நிம்மதியாகவும் தூங்க முடியும் எனச் செய்துகாட்டியிருக்கிறார் இந்த மனிதர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் சென்றுகொண்டிருந்த ரயிலின் லோகோ பைலட், தண்டவாளத்தில் ஒரு மனிதர் சொகுசாகக் குடைபிடித்துப் படுத்திருப்பதைப் பார்த்து ரயிலை நிறுத்தியுள்ளார்.

பின்னர் அந்த மனிதரை எழுப்பி அவரைத் தண்டவாளத்திலிருந்து இறக்கும் வரை பயணிகளுடன் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. .

அந்த நடுத்தர வயது மனிதர் தற்கொலைக்கு முயலவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் பாதுகாப்பற்ற முறையில் இப்படிப் படுத்திருப்பதற்கு எதிராக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!