news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தமிழரசுக் கட்சிக்குள் நடப்பதென்ன?

01 Oct, 2026
இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்,  கடந்த 23 ஆம் திகதி இந்­திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ரக அதி­கா­ரி­களைச் சந்­தித்து, சவூதி அரே­பி­யாவில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருக்கும் சிவ­ராசா அனோஜனின் விடு­தலை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­ய­தாக ஒரு செய்தி தெரி­விக்­கி­றது.

இச்­சந்­திப்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இரா­ச­மா­ணிக்கம் சாணக்­கியன், ஸ்ரீநேசன்,  டொக்டர் ஸ்ரீநாத், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிவ­ஞானம் சிறிதரன், அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோடீஸ்­வரன், திரு­கோ­ண­மலை மற்றும் வவு­னியா பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­க­ளான  சண்­முகம் குக­தாசன், டொக்டர் சத்­தி­ய­லிங்கம் ஆகியோர்  கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதே­வேளை, இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கா­வுக்­கு­ம் இடையில் கடந்த  25 ஆம் திகதி இடம்­பெ­ற­விருந்த சந்திப்பு   எதிர்­பா­ராத வித­மாக  இரத்து செய்­யப்­பட்டு விட்­டது என்ற  தகவல்  பலத்த ஏமாற்­றத்தை தந்தது. சந்­திப்பு ஏன் இரத்­தா­னது என்­ப­தற்­கான கார­ணங்கள் இன்னும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அனோ­ஜனின் மரண தண்­டனை விவ­காரம்  ஒரு தேசிய ஒற்­றுமை உணர்வை கொண்டு வந்­தி­ருப்­ப­துடன், இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மத்­தி­யிலும்  ஒற்­றுமை உணர்வை ஊட்­டி­யி­ருக்­கி­றது  என்று  வைத்துக் கொண்­டா­லும் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு இரத்­தா­கிய சம்­பவம்   ஏதோ­வொன்றை வெளிப்­ப­டுத்­து­வ­துபோல் தெரி­கி­றது.  

வெளிப்­ப­டை­யாக கூறு­வ­தாயின் 2024ஆம் ஆண்டு இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பொதுச்­ச­பைக்­கான  தலைவர், செய­லாளர் மற்றும் நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள்   தெரிவு தொடர்பில் கட்சி இரு­வேறு குழுக்­க­ளாக பிள­வு­பட்டு விட்­டது என்ற ஆதங்கம் ஆத­ர­வாளர் மத்­தியில் பல முரண்­பா­டு­களை உரு­வாக்­கி­யி­ருந்­தது.


சிவ­ஞானம் சிறி­த­ர­னுக்கு ஆத­ர­வான குழு­வென்றும்,  சட்­டத்­த­ரணி  சுமந்­தி­ரனை தலை­வ­ராக்க விரும்பிய குழு­வென்றும் இரு­வேறு குழுக்­க­ளாக பிரிந்து நின்­றதால் ஏற்­பட்ட விளை­வுகள், கட்­சிக்கு பலத்த சேதத்தை உண்­டாக்கி விட்­டி­ருந்­தன.  இந்த விவ­கா­ரத்தில் முன்னாள் தலை­வர்­க­ளான இரா. சம்­பந்தன், மாவை சேனா­தி­ராசா ஆகியோர் முறை­யாக நடந்­தி­ருந்தால்  இந்த பிள­வுக்கு இட­மி­ருந்­தி­ருக்­காது என்ற கருத்தை கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் பலர் முன்­வைத்­தி­ருந்­தனர். கடந்த காலங்­களில் இவ்­வாறு நடந்­த­தில்லை என்­பதும் பல­ரது விமர்­சனமாக இருந்தது.


 சிறிதரன் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­ட­போதும், இன்­று­வரை புதிய நிர்­வாகம் பதவி ஏற்க முடி­யாத நிலையே காணப்­ப­டு­கி­றது. 2024 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் நடத்­தப்­பட்ட தெரிவில்  தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்ட சிறிதரன், தனது பத­வியை இன்­று­வரை  ஏற்க முடி­யாமல் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தொடுக்­கப்­பட்ட வழக்கு முடி­வில்­லாமல் நீண்டு கொண்­டி­ருக்­கி­றது. உடன்­பாடு காணும் விடயத்தில்  பூனைக்கு யார் மணி­கட்­டு­வது என்ற பிரச்­சினை நில­வு­கி­றது.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியை தலை­மை­யாகக் கொண்ட தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு, இரு தசாப்த காலம் வெற்­றி­க­ர­மாக செயற்­பட்டு வந்­த­போதும் பங்­காளிக் கட்­சி­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட கருத்து முரண்­பாடுகள் கார­ண­மாகப்  பிள­வு­பட்­டது. 

இதன் கார­ண­மாக கூட்­ட­மைப்பு சின்­னா­பின்னமாக்­கப்­பட்டு, பல புதிய கூட்­டுக்கள், கூட்­ட­ணிகள் உரு­வாக்­கப்­பட்­டதன் கார­ண­மாக, இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி பல சவால்­களை சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. 

 இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி கூட்­ட­மைப்­பாக  பரி­ண­மித்த காலத்தில்  வடக்கு ,கிழக்கில் 2004 ஆம் ஆண்டு தேர்­த­லில்  22ஆச­னங்­களைப் பெற்று மகத்­தான சாதனை புரிந்­தது. கழுதை  தேய்ந்து கட்­டெ­றும்­பான கதைபோல், அக்­கட்சி  2024 ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் 8 ஆச­னங்­களைப் பெறு­வ­தற்கே பெரும்  சிர­மப்­பட்­டது. ஆளு­மை­யுள்ள சில தலை­வர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டார்கள், தோற்­க­டிக்­கப்­பட்­டார்கள்.

யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறிதரன், ஜனா­தி­பதி அநுரகுமார திசா­நா­யக்­கவைச் சந்­தித்து, தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் அன்­றாட பிரச்­சினை தொடர்பில் கலந்­து­ரை­யாடி தீர்­வு­களைப் பெற ஜனா­தி­ப­தி­யிடம் எழுத்­து­மூலக் கோரிக்­கையை முன்­வைத்­த­மைக்கு அமைய, தமி­ழ­ரசுக்கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­திப்­ப­தற்­கான நாளையும் நேரத்­தையும் ஜனா­தி­பதி ஒதுக்கி, கடந்த வெள்­ளிக்­கி­ழமை (25) இச்­சந்­திப்­புக்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

ஆனால், இந்த சந்­திப்பு என்ன கார­ணத்­தி­னாலோ இரத்து செய்­யப்­பட்­ட­தாக பின்னர் தெரி­விக்­கப்­ப­ட்டது.  இதன் பின்­ன­ணியில் நடந்­தது என்ன என்­பதை அறிய முடி­யா­விட்­டாலும் பட்­டும்­ப­டா­மலும் தெரிவிக்­கப்­படும் தகவல்  அதிர்ச்­சியைத் தரு­வ­தாக இருக்­கி­றது. பாரா­ளு­மன்றம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த அன்­றைய நாளில்  22 ஆவது திருத்­தத்­துக்­கான வாக்­கெ­டுப்பு நடை­பெறும் தின­மா­கையால் தமி­ழ­ரசுக்கட்­சியின் எட்டு  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கு தயா­ராக வந்­தி­ருந்த நிலையில் இந்த சந்­திப்பு இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.


சிவ­ராஜா அனோஜன் விடு­தலை தொடர்­பாக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் அதன்   தலை­வரும், செய­லா­ளரும் கையெ­ழுத்­திட்டு ஜனா­தி­ப­திக்கு ஏற்­கெ­னவே கடிதம் ஒன்றை  அனுப்­பி­யி­ருப்­ப­தனால் இச்­சந்­திப்பு அவ­சி­ய­மற்­றது என்ற கார­ணத்தின் அடிப்­ப­டையில், இச்­சந்­திப்­புக்­கான உடன்­பாடு காணப்­ப­டாத நிலையில் சந்­திப்பு இரத்துச் செய்­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த சந்­திப்­புக்­காக  கடிதம் மூலம் ஜனா­தி­ப­திக்கு கோரிக்கை விடுத்­தவர் ஸ்ரீதரன். வடக்கு, கிழக்கு மக்கள் அன்­றாடம் எதிர்­நோக்கும் பிரச்­சினை தொடர்பில் அவர் தனது கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டு­கி­ற­போது, யாழ். வலி­காமம் கிழக்கு, வசா­விளான், பலாலி, மயி­லிட்டி, தையிட்டி ஆகிய இடங்­களில் இது­வரை விடு­விக்­கப்­ப­டாத காணிகள், மற்றும் குடி­யி­ருப்­புக்கள்  வவு­னியா மல்­வத்து ஓயா சிங்­களக் குடி­யேற்றம், முல்­லைத்­தீவு கேப்­பாப்­பு­லவு, மட்­டக்­க­ளப்பு மயி­லத்­த­மடு, மாத­வனை மக்கள் எதிர் கொண்­டுள்ள நெருக்­க­டிகள், தொல்­லியல் திணைக்­க­ளத்­தினால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட இடங்கள் தொடர்­பாக பார­பட்­ச­மான நட­வ­டிக்­கைகள், வெடுக்­கு­நா­றி­மலை, குருந்­தூர்­மலை போன்ற வர­லாற்று சிறப்­பு­மிக்க வழி­பாட்­டுத்­த­லங்கள் மற்றும் வாழ்­வி­டங்­களில் மேற்­கொள்­ளப்­படும் அண்­மைக்­கால கெடு­பி­டிகள் ,செம்­மணி புதை­குழி அகழ்வு விடயம் தொடர்­பா­க ஏற்­பட்­டு­வரும் நெருக்­க­டிகள், பிரச்­சி­னைகள் தொடர்­பாக விரி­வான கலந்­து­ரை­யா­டலை நடத்தி, தீர்வை தேடும் நோக்­கிலும், தற்­போது எரியும் பிரச்­சி­னை­யாக காணப்­படும் சிவ­ராஜா அனோஜனின் மரண தண்­டனை விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் உச்சக் கவ­னத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கிலும் இந்த சந்­திப்பை கோரு­கி­றோ­மென சிறிதரன் அக்­க­டி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்ததாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சிறிதரன் எம்.பி. சுட்­டிக்­காட்­டிய பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்துரையாட இணங்கிக்கொண்­ட­தற்கு அமை­யவே ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்கா இந்த சந்­திப்­புக்­கான நிய­ம­னத்தை வழங்­கி­யி­ருக்க வேண்டும். ஆனால், நடந்­தது என்­ன­வென்றால்  கோரிக்கை விடுத்­த­வர்­களே பின்னர்  பின் வாங்­கி­யுள்­ளனர்.

இந்த திடீர் மனமாற்றம்  தொடர்பில் விசா­ரித்­த­போது அனோ­ஜனின் விடு­தலை தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கு பல பக்க அழுத்­தங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் நிலையில், இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியும் அது தொடர்­பாக கரி­சனை கொண்­ட­தாக இருக்க வேண்­டுமே தவிர, ஏனைய விட­யங்­களைக் கதைப்­பது தற்­போது  பொருத்­த­மற்­றது என  காரணம் சொல்­லப்­பட்டு, சந்­திப்பு பின் வாங்­கப்­பட்­டுள்­ளது.

அனோ­ஜனின் விடு­தலை தொடர்பில் கட்சி பேத­மின்றி, இன வேறு­பா­டின்றி அனைத்து தரப்­பி­னரும் நாம் இலங்­கையர்  என்ற கூட்­டு­ணர்­வுடன் பல போராட்­டங்­களை நடத்­தி­வ­ரு­வதும், கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­வதும், கையெ­ழுத்து வேட்­டை­களை நடத்­து­வதும், கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களைச் செய்து கொண்­டி­ருப்­பதும் நாட்டின் தேசிய  ஒற்­று­மையை  வெளிப்­ப­டை­யா­கவே எடுத்­துக்­காட்­டு­கி­றது. அனோஜன் ஒரு தமிழர் என்ற  இன நோக்கு  இல்­லாமல், சிங்­கள சகோ­த­ரர்கள்,  இஸ்­லா­மிய சகோ­த­ரர்கள் அவர்கள் சார்ந்த அமைப்­புக்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மத பீடங்கள் ஒரு­மித்து நிற்­பது  ஒரு தேசிய கூட்­டு­ணர்வை காட்­டு­வ­தா­கவே அமை­கி­றது.

 ஜன செத பெர­மு­னவின் தலைவர்  பத்­த­ர­முல்ல சீல­ரத்ன தேரர், அனோ­ஜனின்  பெற்­றோ­ரைச்­சந்­தித்து ஆறுதல் தெரி­வித்­தி­ருப்­பது ஒரு மானிட உணர்­வைக்­காட்­டு­கி­றது. 

இது போன்றே கிறிஸ்­தவ குரு­மார்கள், இஸ்­லா­மிய  தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்  தமது ஆத­ரவை தெரி­வித்து வரு­வது மிக வர­வேற்­கத்­தக்க விட­ய­மாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஜம்மிய்­யத்துல் உலமா சபை­யி­ன­ருடன் இந்து மதத் தலை­வர்கள் கலந்­து­ரை­யாடி இருப்­பது ஆன்­மிக நெறிக்கு அழகு தரும் பாதை­யென்று கூடகொள்­ளலாம்.

சிறிதரன் தான் விடுத்த கோரிக்­கை­யிலி­ருந்து ஏன் பின் வாங்­கினார் என்­ப­தற்கு நியா­ய­மான கார­ணங்கள் இருக்க வேண்டும். நாம் அறிந்த வரையில் சிறி­த­ரனின் இந்த திடீர் மாற்­றத்­துக்­கான காரணம், ஏலவே தலைவர், செய­லாளர் கையெ­ழுத்­திட்டு அனுப்­பி­வைக்­கப்­பட்ட கடிதம் ஜனா­தி­ப­தி­யிடம் சென்­றி­ருக்கும் நிலையில், அதையும் மீறி தனது தலை­மையில் சந்­திப்பு இடம் பெறு­மானால் கட்­சிக்குள் முரண்­பாடு ஏற்­பட வாய்ப்­பாக போய்­விடும்  என்ற கார­ணத்­தினால் பின் வாங்­கி­யி­ருக்­கலாம். இன்­னொரு வகையில் பார்க்­கப்­போனால் கட்­சியின்  தலைவர், செய­லாளர் இல்­லாத சந்­திப்பை குழுவில் உள்ள சிலர் விரும்­பாமல் கூட இருக்­கலாம்.

எது எப்­படி இருப்­பினும் அனோ­ஜனின் விடு­த­லைக்கு தமி­ழ­ர­சுக்­கட்சி அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்­டும் என்­பதை மறுக்க முடி­யாது. அவ்­வாறு இல்லாவிட்டால்  ஊர் பற்றி எரிய, தமி­ழ­ர­சுக்­கட்சி பிடில் வாசிக்க வெளிக்­கி­டு­கி­றது என்ற கெட்ட பெயரை சுமக்­க­வேண்டி வந்து விடும்.

இருந்­த­போதும் வேறு சில பிரச்­சி­னை­களை ஜனா­தி­ப­தி­யுடன் பேசி முடிவு எடுக்க வேண்­டிய கட­மையும் அவ­ச­ரமும் கட்­சிக்கு உள்­ளது என்­பதை மறுத்­து­வி­ட­மு­டி­யாது. உதாரணமாக, ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியிடம் சிறிதரன் கையளித்த மகஜரில் தமிழர்கள் மீதான கடந்த கால அரசாங்கங்களின் இனப்படுகொலைகளின் உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே செம்மணி மனிதப்புதைகுழியை தொடர்ந்தும் அகழ்வதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்வதற்கு இலங்கை அரசு தயங்குகிறது என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தார். இது வெளிக் கொண்டுவரப்படவேண்டிய மிகப் பாரிய மனித உரிமைமீறல் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதே போன்றே மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கும் பாதிக்கப்பட்ட நிலங்களை மீளப் பெறுவதற்கும்    உரிய நடவடிக்கைகளை  உடன் மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அது பாரிய இன மோதல்களை கொண்டு வந்து விடுமென்ற உண்மையை தெரிவித்து அதற்கான பரிகாரங்களை உடன் காண வேண்டும். அதற்கு ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் அவசியமானது.

  இவ்வாறு, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள நடை­மு­றைப்­பிரச்சினை­க­ளுக்கு தீர்வு துரித கதியில் காணப்­ப­டா­விடின் கடந்த காலத்­தைப்­போ­லவே  இவை­யெல்லாம் ஒன்று திரண்டு நாட்டில் மீண்டும் ஓர் இனப்­போரைக் கொண்டு வந்­து­விடும் என்­பதை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும்.

-திரு­மலை நவம்-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!