news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தரையில் அழுது புரண்ட நடிகை ரோஜா.. தண்ணீர் கொடுத்தவரின் கன்னத்தில் பளார்.. இவ்வளவு டென்ஷன் ஏன்?

08 Nov, 2026


அமராவதி: நடிகையும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ரோஜா தரையில் அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்துவதும், அவரை போலீசார் இழுத்து சென்று காரில் ஏற்றுவதும், காரில் இருந்தபோது அவருக்கு தண்ணீர் கொடுத்தவரை ரோஜா கண்ணத்தில் பளார் என தாக்கும் வீடியோ இணையதளத்தில் அதிகமாக பரவி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.


தற்போது இணையதளங்களில் நடிகை ரோஜா தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரோஜா அழுகிறார். 

அவரது அழுகையையும் பொருட்படுத்தாமல் அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி செல்கின்றனர்.
போலீசாரிடம் எதிர்ப்பை காட்டும் ரோஜா திடீரென்று தரையில் அமர்கிறார். அவரை மீண்டும் போலீசார் தூக்கி செல்ல முயன்றபோது அவர் எதிர்ப்பு தெரிவித்து அழுகிறார். 

இறுதியாக போலீசார் போராடி அவரை காரின் முன் இருக்கையில் அமர வைக்கின்றனர். இதையடுத்து பின் இருக்கையில் இருக்கும் ஒருவர் ரோஜாவிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டுகிறார். 

அதனை வாங்கிய ரோஜா கோபமாக வாங்கி வெளியே ஊற்றுகிறார். தண்ணீர் பாட்டிலை ஆக்ரோஷமாக வெளியே தூக்கி வீசுவதோடு, தண்ணீர் கொடுத்த நபரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். 

 இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரோஜா ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என்ன நடந்தது? என்று பலரும் கேள்வி கேட்டு வரும் நிலையில் அதற்கான விடையை இங்கு பார்க்கலாம். 

அதுபற்றிய முழு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆந்திராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. ரோஜா ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் ஆவார். 

தற்போது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். நகரி தொகுதிக்குட்பட்ட இளதுரு எம்பிடிசி சீட்டுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 

இதில் பதிவான ஓட்டுகள் நகரியில் உள்ள அரசு டிகிரி கல்லூரியில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. 

அதில் ரோஜாவின் கட்சியை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் உதயகிரி தேவி 10 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கு ளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர் தெலுங்கு தேசம் வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார். வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ளதால் மீண்டும் எண்ண வேண்டும் என்று அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறினர். 

இதையடுத்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது 3 வாக்குகள் வித்தியாசத்தில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் உதயகிரி தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த ரோஜா வாக்கு எண்ணும் மையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் கதறி அழுதார். ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெறுவதாகவும், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கண்ணீர் வடித்தார். 

இதையடுத்து போலீசார் ரோஜா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அப்புறப்படுத்தினர். அப்போது தான் ரோஜா எதிர்ப்பு தெரிவித்தார். அந்த வீடியோ தான் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!