news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தலைமன்னார் மணல் திட்டையில் தவித்த இலங்கை அகதிகள் 8 பேர் மீட்பு: கடற்படை நடவடிக்கை!

06 Sep, 2026
தலைமன்னார் கடற்பகுதியில் மணல் திட்டு ஒன்றில் வழிதவறித் தவித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரைக் கொண்ட குழுவினரை இலங்கை கடற்படையினர் இன்று சனிக்கிழமை (05) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தலைமன்னார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இக் குழுவினர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

இக் குழுவில் ஒரு ஆணும், நான்கு பெண்களும், 2 முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் அடங்குவர்.


ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என்றும், இராமேஸ்வரம் ஊடாக இலங்கை திரும்ப முற்பட்ட போது மணல் திட்டையில் தவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வழிதவறிப் பாதிக்கப்பட்டிருந்த இவர்களுக்குக் கடற்படையினரால் குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் உடனடியாக வழங்கப்பட்டன.

மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!