news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தலைவர் பிரபாகரனின் வீட்டு பதாகை கிழிப்பு -திருமாவளவன் பார்வையிட்ட பின் சம்பவம்

19 Nov, 2026
வல்வெட்டித்துறையில் அமைந்தி ருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்தின் முன்பக்கமாக உள்ள எல்லை மதிலில் கட்டப்பட்டிருந்த பதாகை இனம் தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது. 'தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் சிறு வயதில் வசித்த வீடு' என குறிப்பிட்டு, அவர் வசித்த வீட் டின் படம் அந்த பதாகையில் இருந்த நிலையில், அப்பதாகை நேற்று கிழிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் தொல்.திருமாவளவன், வல்வெட்டித் துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டார். 

அதன் பின்னரே குறித்த பதாகை கிழிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!