-
ஜனாதிபதி அலுவலகத்துக்கு சொந்தமான 03 கெப் ரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்வசீம் தாஜூதீன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தை தீவிரமாக விசாரணை செய்துவரும் புலனாய்வாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு சொந்தமான மூன்று கெப் ரக வாகனங்கள் தாஜூதீன் மரணத்துடன் மட்டுமல்லாமல் வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என கருதுகின்றனர்.
ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகிய இருவரின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி காரியாலயத்தின் ஊடாக WPPD79-, WPPD80-, WPGB05- ஆகிய மூன்று கெப் ரக வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன என்றும் இவை தாஜூதீன் மரணத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாகவும் புலனாய்வாளர்கள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தனர்.
இவ்வாகனங்களின் நடமாட்டம் தொடர்பாக விசாரித்துவரும் புலனாய்வாளர்கள் இவற்றின் நடமாட்டத்துக்கான நேர சூசிகை கிடையாது என்றும் இருக்கும் அட்டவணையும் முறையானது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாகன நடமாட்டங்களை ஆராய்ந்து வரும் புலனாய்வாளர்கள் இவ் வாகனங்கள் வேறு குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதேசமயம், தாஜூதீன் கொலைச் சம்பவம் இடம்பெற்ற 2012 மே மாதம் 16ஆம் திகதி இரவு ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசித்த WPLV05-, WPPD13, WPKA98- , WPKD01-, WPPA72- ஆகிய இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்கள் தொடர்பாக தீவிரமாக விசாரித்துவரும் புலனாய்வாளர்கள், இவற்றின் நடமாட்ட அட்டவணைகளில் பிரச்சினைகள் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!